பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரா. நாச்சியப்பன் 53 இவ்வகைப்பாட்டுகள் எல்லாம் கொண்டது எங்கள் நாடு என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளுகிறார். இன்றையத் தமிழ்நாடு சாதி வேற்றுமைகளால் சீர்கெட்டுக் கிடக்கின்றது. இதனைக் கவிஞர் தமிழ்நாட்டைக் கெடுத்ததெலாம் வேற்று மையாம் தடையென்று தெரிந்ததனை யொழிக்கச் சேர்வோம் என்று கூறி அதனையொழிக்க வகை செய்வோம் என்று அறை கூவல் விடுக்கின்றார். தமிழ் நாடு மேம்பாடடைந்து பண்டைய நிலையைப் பெற வேண்டுமானால் சாதி வேறுபாடு நீங்க வேண்டும். நமது முந்திய அரசு தெருப் பெயர்களில் சாதியை நீக்கியது.இன்றைய அரசு போக்குவரத்துக் கழகங்களில் அப்பெயரை நீக்கியது. வள்ளுவப் பெருந்தகை சாதியைப் பற்றி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். என்று கூறுவார். இக்கருத்தையே கவிஞர் நாராநா. தொழிற்பெயரைச் சாதியென்று வகுத்த பின்னர் தோன்றியவள் வறுமையெனும் ஆட்டக் காரி எழிற்பிறவி மானுடமென் றறிஞர் சொல்வார் யாமுமிந்தப் பிறவிதனை யடைந்தும் வாடி நிழல்கான வகையின்றி நிற்க நேர்ந்தால் நெஞ்சத்தான் கொதியாதோ இந்த நாட்டில் அழுதொருவன் இருக்கும்வரை விடுத லையை அடைந்துவிட்டோம் என்பதெல்லாம் வெறுங்கூப் பாடே என்று விளக்கமாக உரைப்பார். கவிஞரின் பகுத்தறிவு எண்ணங்கள் சில பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. புரட்சியின் தொடக்கதினைக் கவிஞர் ஏழை நெஞ்சம் புண்ணாக நடைமுறையில் தாழ்வு செய்து பொறுமைக்கோர் எல்லையினைக் காணச் செய்தீர் எண்ணாமல் இருந்துவிட்டீர் பொறுமைக் கெல்லை என்றாலே புரட்சிப்போர்த் தொடக்க மென்றே என்று காட்டியிருப்பது உலக வரலாற்று வெளிப்பாடாகக் உள்ளது.