உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

‘வாழையடி வாழை’

'பாழும் பணத்தைத் தேடிப்
படும் பாடு கணக்கில்லை
பகவானை எண்ண மட்டும்
அவகாசம் உனக்கில்லை.”

தமிழன் இதயம் : நெஞ்சோடு இரங்கல்


என்று சாடுகின்றார்.

'கடவுளை அறிந்தவர்கள்’ என்னும் கவிதையிலே உண்மையான பத்தர்களைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'துன்பப் படுவோர் துயரம் சகியார்
துடிதுடித் தோடித் துணைசெயப் புகுவார்:
இன்பம் தமக்கென எதையும் வேண்டார்;
யாவரும் சுகப்படச் சேவைகள் பூண்பார்.’

என்று குறிப்பிட்டு, இத்தகையவரே கடவுளை அறிந்தவராவர் என்றும், அனைவரும் மதித்திடத் தகுந்தவராவர் என்றும் அறிவிக்கின்றார்,

பாட்டின் திறத்தாலே பாரினை உயர்த்திட வந்தவர்களெனக் கம்பனையும் காளிதாசனையும் தியாகையரையும் பாரதியையும் கவிஞர் குறிப்பிடுகின்றார்:


'கவிபாடிப் பெருமைசெயக் கம்ப னில்லை;
கற்பனைக்கிங் கில்லையந்தக் காளி தாசன்;
செவிநாடும் கீர்த்தனைக்குத் தியாக ரில்லை;
தேசீய பாரதியின் திறமும் இல்லை.”

காந்தியக் கொள்கையில் வெறியுடையவர் நாமக்கல் கவிஞர். காந்தியைப் பற்றி இவர் பாடியுள்ள பாடல்கள் பலவும் இதனை மெய்ப்பிக்கின்றன. உவமானம் வேறெவரும் உரைக்கவொண்ணா உத்தமராம் காந்தியாரை' இவர் உவந்து பேசுகின்றார்.

'உள்ளம் உருகுது கள்ளம் கருகுது
உத்தமன் காந்தியை நினைந்துவிட்டால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/112&oldid=1461285" இலிருந்து மீள்விக்கப்பட்டது