பக்கம்:வாழையடி வாழை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

‘வாழையடி வாழை’

'குன்றாத கருமைநிறக் குழலின் மீது -
குளிர்முல்லை சூடிக்கொண் டிருக்கும்பெண்ணே!’

ஊர்நோக்கி, காதலி முகம் நினைந்து விரைந்து திரும்பும் காதலன் வேகத்திற்குப் பின் வரும் உவமையினை ஆள்கின்றார் கவிஞர்:

'போர்வீரன் ஊர்திரும்பி வருதல் போலும்
புதுவெள்ளம் புரண்டெழுந்து வருதல் போலும்
ஊர்நோக்கி விரைந்தோடி இல்லம் வந்தான்.’

ஒளிவீசும் காலையின் உதயசூரியன் 'உரை கல்லில் சரிபார்த்த செம்பொன் போல' உளதாம். 'புதுமை யின்றிப் பாடல் புனைந்திடுவது, உயிரில்லாத பொம்மையின் மீது சுற்றும் பட்டுடைக்கு நிகராகும்', என்கிறார் கவிஞர்.

'புதுமையே யின்றிப் பாடல் புனைந்திடல் உயிரில் லாத
பதுமையின் மீது சுற்றும் பட்டுடை போன்ற தாகும்.’

அடுத்து, 'முன்னோர் மொழி பொருளே போற்றும் நெறியிலே' சென்றுள்ளார் கவிஞர். ஆழ்ந்த சங்க நூற் பயிற்சி; மிக்கவர் கவிஞர் என்பது, பின்வரும் தொடர்களால் புலனாகின்றது”

'அதிமது ரத்தழையை யானைகள் தின்றபடி
புதுநடைபோடும்.’

என்கிறார்: இது,

‘வயல்விளை இன்குளகு உண்ணாது
நுதல் துடைத்து...யானை’

என்ற முல்லைப்பாட்டு அடிகளை நினைவூட்டுகின்றது.

மயிலடி அனைய மாக்குரல் நொச்சி’

என்பது குறுந்தொகைத் தொடர். இதனை அடி யொற்றியே கவிஞர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/122&oldid=1461294" இலிருந்து மீள்விக்கப்பட்டது