பக்கம்:வாழையடி வாழை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

‘வாழையடி வாழை’


தேமாங் கனிகள் திருப்பிக்கொண் டனவாம்
புனலாடும் தாமரை போந்த மங்கையர்
ஆடிய அங்கையின் அழகினை வென்றிட
முடியாமற் போனதால் முக்காடிட் டனவாம்.’

சிறந்த கவிஞர் சிறந்த கருத்துக்களைத் தரவேண்டும் என்பர். (The great judged by the frame of mind they induce). அம்முறையில் நல்ல கருத்துக்களை நாட்டு மக்களுக்கு வாரி வழங்கியுள்ளார் கவிஞர்:


‘---------------------- நீதி என்னும்
வேரில்நீர் ஊற்றுவதே எனக்கு வேலை:
வேந்தனுக்குக் குடிமக்கள் குரலே வேதம்:
பொதுமக்கள் நலமெனக்குப் பெரிதேயன்றிப்
புகழெனக்குப் பெரிதன்று’

என்று எண்ணுபவனே நல்ல அரசனாவான் என்கிறார்,

கவிஞரின் நகைச்சுவையினைச் சிறிது காண்போம்:

'உரையிடை யிட்ட செய்யுள்
ஓவியச் சிலம்பு தந்தோன்
நரைதிரை வாரா முன்பே
நாட்டிலோர் துறவி யானான்
விரிகடல் பிறந்த போதே
வெண்ணரை பெற்றி ருந்தும்
கருநிற உடையை மாற்றிக்
காவியேன் கட்டவில்லை?”

என்கிறார்.

பூம்புகார் பற்றிய பாடலில் சொற்சிலம்பமாடுகிறார் கவிஞர்:

'துகிர்துகிர்’ என்னும் ஓசை
துகிர்விலை யோசை; பூவை
'முகர் முகர்’ என்னும் ஓசை;
மொய்த்தவர் ஓசை; நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/128&oldid=1461300" இலிருந்து மீள்விக்கப்பட்டது