உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

‘வாழையடி வாழை’


தூளாகும் பெண்மை; மனம் துணிவி லேறும்;
தோளோடு தோள்சேரத் துடிக்கும் காண
நாளாகும் படிதோன்றின் நடையுஞ் சோரும்;
நடை சோர்ந்து போனலும் பருவந் தேறும்!'

என்று பிரிவுத்துயரில் பெரும்பேதுறும் காதலியின் நிலைமையினைக் கவிஞர் கூறுகின்றார்,


மின்னாமல் முழங்காமல் பொழியும் மேகம்
வியன்மாதர் நெஞ்சன்றி வேறே தாகும்!”

என்று கவிஞர் கூறும் கூற்றின் நயம் காண்க!

அங்கு மிங்கும் நோக்கி நோக்கி
அண்ணல் மேனி தேடுவாள்
பங்க யங்கள் கூம்பல் போலப்
பஞ்சு நெஞ்சம் மூடுவாள்
அங்கு மந்த மன்னன் எண்ணம்
அம்பெ டுத்துப் பாய்வதால்
எங்குச் சென்று தேறு வாள்? பின்
எவரி ருந்து தேற்றுவார்?

தலைவியின் துயரைக் கூறும் கவிஞர், நம் நெஞ்சங்களைப் பிழிந்தெடுக்கிறார். இறுதி இரண்டு அடிகளைச் சொல்லச் சொல்ல, எண்ன எண்ணக் கொப்பளிக் கும் துன்பத்தினை என்னவென்பது?

இவ்வாறு செல்லும் காவியம் இறுதியில் அவலத்தில் முடிகிறது.

தன் நெஞ்சம் கொள்ளை கொண்ட தலைவியினை,


. . . . . . . . . . . . . . நேரிழை ஒருத்தி
மாநிறம் ; கூந்தல் வண்டுக் கருமை
மைவிழி இரண்டும் மானிடம் பெற்றது:
விழிக்கட் பேதை, வெண்மதி பாதி
நெறியாய்க் கொண்ட நிகரிலா அழகி;
வாழைத் தொடையில் வளர்சிலைப் பாங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/140&oldid=1461307" இலிருந்து மீள்விக்கப்பட்டது