பக்கம்:வாழையடி வாழை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10.கவிஞர் முடியரசர்

கவிஞர் முடியரசர் தரமான கவிதைகளைத் தமிழ்க் கவிதையுலகிற்குத் தருபவர்; தமிழ் இலக்கிய இலக் கணங்களை முறையாகப் பயின்றவர்; மென்மையான மனமும் அதில் நுண்மையான கருத்துக்களும் கொண்டவர்; ஆழ்ந்த உணர்ச்சிகளை நினைவிற்குக் கொண்டு வந்து, கவிதை வடிக்கும் கலை கைவரப் பெற்றவர். பழமையைப் போக்கும் உள்ளமும், தமிழை வணங்கும் தனிக்கொள்கையும், சமுதாயச் சீர்திருத்தத்திலே ஆர்வமும் கொண்டவர் கவிஞர் முடியரசர். பாரதியாரையும் பாரதிதாசனாரையும் பின் பற்றிப் பெருநடை போடும் கவிஞரின் கவிதையழகினை இனிக் காண்போம்.

இவர் பாரதியார் வழியிலேயே தமிழினைத் தாயாக வும், தந்தையாகவும், காதலியாகவும், மனைவியாகவும் மகனாகவும் எண்ணிப் பல பாடல்களைப் பாடியுள்ளார். 'காவியப் பாவை’ என்ற இசைத் தமிழ் தொகுதியால் இசைத் தமிழிற்குத் தொண்டும் இனிமையுற ஆற்றி யுள்ளார் கவிஞர்.

பாடுவதென்றால் தமிழினில் பாடு
        பாவையே உளமகிழ் வோடு!
வாடிடும் என்மன வேதனை தீர்ந்திட
        வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திட’ (பாடு)

என்று 'தமிழில் பாடு'என்று தமிழரை. வற்புறுத்துகின்றார் கவிஞர் முடியரசர்! ஏன்! வற்புறுத்த கூடாதா?

'தமிழ்வாழ்க என்று சொன்னால்
        குடி மூழ்கிப் போகுமா? இங்கு (தமிழ்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/148&oldid=1338096" இலிருந்து மீள்விக்கப்பட்டது