பக்கம்:வாழையடி வாழை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 வாழையடி வாழை

இணைந்த தேஒரு நாளடா
இரண்டும் உலகில் மாறி மாறி
இயங்கும் உண்மை கேளடா-இதை
எண்ணி மண்ணில் வாழடா?'

துன்பமே இயற்கையென்று எண்ணுமல, இன்பமும் துன்பமும் இணைந்து வருவதே வாழ்வு என்ற அரிய கருத்தினை, இப்பாடல் வற்புறுத்துகின்றது. 'சோலை மலர்களே வண்டினம் நீவிடத் தூங்கிய மந்திகள் கிளைகளில் தாவிடக்' காலையில் கதிரவன் தோன்றுவதாகவும், 'சோலையில் பறவைகள் கூட்டில் உறைந்திட வேலையில் ஆதவன் மெல்லவே' மறைந் திடுவதாகவும் கவிஞர் பாடுகின்றார். இவ்வாறு காவியப்பாவை "தமிழைப் புதிய முறை யில் பாடி வருகிறாள், பாரதியார் கண்ணனைப் பாடிய பாணியைப் போல. அவள் குரலில் காதற்பாணியும் கேட்கும்; ஆடும் ஒலியும் ஆர்க்கும்; அறநெறி இசை யும் கலக்கும்" என்று கவிஞர் இந்நூலின் முன்னுரை யில் குறிப்பிட்டுள்ளது போன்றே, 'காவியப் பாவை' கருத்துவளம் செறிந்து, கற்பனை நயம் மிளிர்ந்து கவினுறக் காணப்படுகின்றாள். கவிஞர்கள் என்றாலே இயற்கையில் ஈடுபாடு கொண்டவர்களாய் இருப்பார்கள் அல்லவா? பாரதியாரை அடியொற்றித் தமிழைப் பல நிலை களில் கண்ட கவிஞர் பாரதிதாசனாரைப் பின்பற்றி 'அழகின் சிரிப்பினை'ப் படைத்துள்ளார்.

'கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக்
        காட்சிதரும் குஞ்சுகள்தம் வாயில் கோழி வேல்மூக்கால் அன்புகலந் திரையை யூட்டும்
        வேளையிலும், வானத்து வீதி செல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/152&oldid=1338248" இலிருந்து மீள்விக்கப்பட்டது