உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11.இளவேனில் 'சோமு'

தமிழ் இலக்கிய மரபினை நன்கு உணர்ந்தவர் கவிஞர் சோமு. இவர் தமிழில் புலவர் பட்டம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் புலமையுடையவர். மேனாட்டுக் கவிதைப் போக்கினைத் தெள்ளத் தெளிய உணர்ந்தவர், தமிழில் புதிய கவிதை உருவங்களை இவர் படைத்துள்ளார். இதனைக் கவிஞர் தம்முகவுரையில் பின் வரு மாறு கூறியுள்ளார்:

"ஆங்கில இலக்கியத்தில் 'லிரிக்ஸ்' என்று வழங்கப்படும் கவிதைகள் ஏராளம். கவிஞன் தன்னுடைய அனுபவங்களை வாசகரிடம் நேருக்கு நேராய் நின்று எடுத்துச் சொல்லுகிற பாடல்களே 'லிரிக்கு'களில் முக்கியம்.........தமிழிலும் இம்மாதிரியான லிரிக்ஸ் பாடல்கள் பழங்காலத்தில் ஏராளமாய் இருந்தன என்பது தெரிகிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் 'பண்ணத்தி' என்னும் பாடல் இனங்களையும் 'லிரிக்ஸோடு’ ஒட்டி நினைவுபடுத்திக் கொள்ளலாம்...... பாரதியார் ஆங்கில 'லிரிக்ஸ்' முறையில் சில அற்புதமான பாடல்களைச் செய்திருக்கிறார். அவருடைய இந்த மறுமலர்ச்சிக் கவிதைகளிலே "Lyric cry" என்ற நாதம் இதயத் துடிப்பாய் ஒலிக்கிறது. தமிழ் மரபோடு ஒட்டி, ஆனால் ஆங்கில 'லிரிக்ஸ்’ போன்ற அமைப்பிலே, சில பாடல்கள் எழுதிப் பார்க்கலாம் என்ற ஆசையால், அவ்வப்போது நான் சில பாடல்களே எழுதி வந்தேன்.’

இவ்வாறு இத்துறையில் கவிஞர் எடுத்துக் கொண்ட முயற்சியே 'இளவேனில்' என்ற அரிய கவிதைத் தொகுதியினை நமக்குக் கிட்டச் செய்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/161&oldid=1338154" இலிருந்து மீள்விக்கப்பட்டது