உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

வாழையடி வாழை

கன்னி அங்கிருந்து
கற்கண்டு மதுவார்த்தாள்!
கன்னி அழகொளிரும்:
கையாலே மதுவார்த்தாள்!”

என்று கவிஞன், தன் அனுபவத்தினை அற்புதமாகக் கூறுகிறான். கவிஞன் இறுதியில் கூறும்,

கிண்ணம்கைக் கொண்டதுண்டு
கிள்ளைமது வார்த்ததுண்டு
மதுக்கிண்ணம் கையிலுண்டு
மங்கைமது வார்த்ததுண்டு
பின்னை நடந்ததொன்றும்
பேச வருவதில்லை
பேச வருவதில்லை
பேச்சுக் கடங்குவதில்லை!”

என்னும் கவியில் பொதிந்து கிடக்கும் வாழ்க்கைத் தத்துவந்தான் என்னே!

கவிஞர் சோமு அவர்களின் கவிதை, தமிழ் மக்களுக்கு ஒரு 'சீதனம்’ என்ன கூறிய 'ரசிகமணி டி. கே. சி.'அவர்களின் கூற்று முற்றிலும்உண்மையே.

கவிஞர் சோமு திருநெல்வேலிச் சீமையினர்; ரசிக மணியோடும் ரசிகமணியின் திருக்கூட்டத்தோடும் திருக்குற்றாலச் சாரலில் மூழ்கித்திளைத்தவர். எனவே , திருக்குற்றாலத்தினை இனிமையுறச் சொல்லில் வடித்து அழகுக் கவிதையாக்கி நமக்கு என்று தந்துள்ளார்:

"வானை அளந்துநின்ற மலைகளுண்டு-நல்ல
வாசமொடு தென்றல்உலா வருவதுண்டு
தேனைச் சொரிந்திடுபூஞ் சோலைகளுண்டு-வாகாய்த்
தெள்ளியநீர் துள்ளிவரும் ஓடைகளுண்டு.”

என்னும் கவிதையினைப் பாடும்பொழுது, குற்றாலச்சாரலில் நின்று குளிப்பதுபோல் இருக்கின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/164&oldid=1338174" இலிருந்து மீள்விக்கப்பட்டது