உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞனும் கவிதையும் 19


'உள்ளத் துள்ளது கவிதைஇன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்உள்ளம்
தெளிந்துரைப்பது கவிதை’

மலரும் மாலையும்: கவிதை: 7


உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய மூன்றும் எல்லாக் கலைகட்கும் இன்றியமையாத உறுப்புகள் என்றாலுங்கூடக் கவிதைக் கலைக்கே அவை பெரிதும் வேண்டப்படுவனவாகும். கவிஞன் கூடுவிட்டுக் கூடுபாயும் கழைக் கூத்தாடியானால்தான் அவன் படைக்கும் கவிதை சிறக்கும். அவன் பெற்ற அனுபவங்களை அப்படியே மொழியில் படைப்பதே கவிதையாகும்.1 கவிதைக்கு ஒலிநயம் மிகவும் இன்றியமையாதது. மேலும், கவிதை, வாழ்க்கையின் உரைகல்லாக (விமரிசனமாக) அமைகிறது.2

எனவே, 'நல்லொழுக்கத்தினை வற்புறுத்துவதாகவும் வளர்ப்பதாகவும் கவிதை அமைதல் வேண்டும். தவறான பயனை விளைவிக்குமேயானால், அது வீழ்ச்சியடையும் என்கிறார், 'மாத்யூ அர்னால்டு’ என்பார்.3 'மக்கள் ஆக்காத மனுவேந்தர்கள் கவிஞர்கள்,' என்ற 'ஷெல்லி’யின் கூற்றிற் கிசையக் கவிஞர்கள் விளங்குவார்களேயானால், நாடும் மொழியும் நற்றமிழ் இனமும் நீடுற நித்தமும் புகழ் சிறந்து விளங்கும் என்பது திண்னம்.


1. Poetry is the translation of experience into language.
2. Poetry is at the bottom, the criticism of life.
3. A poetry of revolt against moral ideas is a poetry of revolt against life; a poetry of indifference towards moral ideas is a poetry of indifference towards life.
4. Poets are the unacknowledged legislators of the world.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/21&oldid=1461211" இலிருந்து மீள்விக்கப்பட்டது