பக்கம்:வாழையடி வாழை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 53

எழுந்த இலக்கியப் படைப்புகளே கவிமணியின் கவிதைகளாகும்.

எளிய சொற்களும், உயர்ந்த கருத்துகளும் விழுமிய ஓசையும் கவிமணியின் கவிதைகளில் கட்டாயம் கலந்திருக்கக் காணலாம். அவர் பாடியுள்ள சரசுவதி துதிப்பாடலைக் காண்க:

'நாடிப் புலங்கள் உழுவார் கரமும்; நயவுரைகள்

தேடிக் கொழிக்குங் கவிவாணர் நாவும் செழுங்கருணை

ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்துநடம்

ஆடிக் களிக்கும் மயிலே! உன் பாதம் அடைக்கலமே’

கோயில் வழிபாடு’ என்ற தலைப்பில் கவிமணி பாடியுள்ள பாடல் ஒர் அரிய கருத்தினை உள்ளடக்கி நிற்பது. கோயில் முழுவதுங் கண்டும், உயர் கோபுரம் ஏறிக் கண்டும், தேவாதிதேவனைக் காண இயலவில்லை. ஏன்? கண்ணுக்கினிய கண்டு, மனத்தைக் காட்டில் அலையவிட்டு மக்கள் வாழும்போது, பண்ணிடும் பூசை யாலே பயன் விளைந்து பரமன் தோன்றுவானோ? தோன்றான் அன்றாே? பின், இறைவன் எங்குளன்?

கவிஞர் காட்டுகின்றர்:

உள்ளத்தில் உள்ளான் அடி!-அது

உணர வேண்டும் அடி! உள்ளத்தில் காண்பாய்எனில்-கோயில்

உள்ளேயுங் காண்பாய் அடி!’ இந்தப் பாடலோடு,

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே

மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய், பராபரமே!’

என்னும் தாயுமானவர் வாக்கினை ஒப்பிடுக.

'பாரதியும் பட்டிக்காட்டானும்'என்னும் கவிதை பாரதியாரின் கவிதைக்கு உரிய உறைகல்லாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/55&oldid=1340651" இலிருந்து மீள்விக்கப்பட்டது