உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 97


‘முப்பத்துமுக்கோடி மக்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளும் அத்தொகை இருக்கும்’, என நொந்து பேசும் கவிஞர்,

'உறுதியுடன் தமிழரெலாம் ஒன்றுபட்டால் எவ்வெதிர்ப்பும்
ஒழிந்து போகும்’

—தமிழியக்கம்: 13


என்று குறிப்பிடுகின்றார்,

'இல்லாமைப் பிணியொழிந்து, கல்வி நலம் எல்லார்க்கும் வாய்க்க வேண்டும்’ என்றும் கவிஞர் முரசு கொட்டுகிறார்.

'ஒருவனும் ஒருத்தியுமாய் மனம் உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ?’ என்று கவிஞர் காதல் திருமணத்தினை வரவேற்கிறார்.

'ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! —மூடர்
‘எதிர்ப்பில் வெளிப்படும் நமது சக்தி! —மற்றும்
பேடி வழக்கங்கள் மூடத்தனம்—இந்தப்
பீடைக ளேஇங்குச் சாத்திரங்கள்’

என்று, 'மாந்தோப்பில் மணம்' என்னும் கவிதையில் குறிப்பிடும் கவிஞர், கைம்பெண் நிலைக்குக் கழிவிரக்கம் கொண்டு,

'கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கு
வேரில் பழுத்த பலா”

என்று கூறி,

'ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்ற முண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான் ;
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?'

என்னும் வினாவை எழுப்பி, நம்மைச் சிந்திக்க வைக்கிறார்,

வா.—7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/99&oldid=1461274" இலிருந்து மீள்விக்கப்பட்டது