உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வாழையடி வாழை

மேலும் மேலும் செய்துகொண்டே போனதில் தூய்மையான இன மலர்களே காணப்பெற்றன. ஆகவே, இரண்டாவது தலைமுறை யில் கலப்பின வகையிலிருந்து தூய்மையானவை இரண்டும் பிரிந்து விடுகின்றன என்றும், இவ்வாறு பிரிந்தவற்றிற்கும் ஆதியில் சோக்கை செய்த பெற்றோர்கட்கும் யாதொரு வேற்றுமை இல்லை என்பதும் தெரிந்தது.

எனினும், இரண்டாவது தலைமுறையில் முதல் தலைமுறை யிலுள்ள கலப்பினத்தைப் போலவே சில வெண்-சிவப்புப் பூக்களும் கலந்திருந்தன. இவற்றை மீண்டும் தன்-மகரந்தக் கலப்புச் செய்த தில் அவை இரண்டாவது தலைமுறையிலுள்ளதைப் போல் சிவப்பு. வெள்ளை, வெண்-சிவப்பு மலர்களைத் தந்தன. இந்த மூன்றாவது தலைமுறையிலுள்ளவற்றைத் தன்-மகரந்தக் கலப்பு செய்து பயிரிட்ட தில் அவற்றுள் சிவபபு மலர்களால் உண்டான செடிகள் சிவப்பு மலர்களையும. வெண்மை நிறமுள்ள மலர்களாலுண்டானவை வெண்ணிற மலர்களையும் தந்தன. கலப்பினப் பூக்களாலுண்டான செடிகள் முதல் இரண்டு தலைமுறைகளிலுள்ள கலப்பினங்களைப் போலவே மூன்றுவித நிறப்பூக்களையே தந்தன.

இரண்டாவது தலைமுறையிலுள்ன சிவப்பு, வெண்மை, வெண்-சிவப்பு மலர்களைக் கணக்கிட்டுப் பார்த்ததில் முடிவுகள் ஓர் ஒழுங்கிலேயே அமைந்திருந்தன. பாத்தி பெரிதாகவும். அதில் பல செடிகளும இருப்பின் இககணக்கு நன்கு அமையும். மொத்த முள்ள பூக்களில் காலில் ஒரு பகுதி வெண்ணிறப் பூககளும், நாலில் ஒரு பகுதி சிவப்புப் பூக்களும், மீதியுள்ள நாலில் இரண்டு பகுதி வெண்-சிவப்புப் பூக்களுமாக இருந்தன. இந்தச் சோதனையை எததனை தடவை திரும்பத் திரும்பச் செய்தாலும் இதே முடிவு களையே தந்தன. இரண்டாவது தலைமுறையிலுள்ள வெண்சிவப்பு மலர்களைக்கொண்டு மூன்றாவது தலைமுறைப் பூக்களை உண்டாக்கினால் அவற்றிலும் வெள்ளை, வெண்-சிவபபு, சிவப்பு மலர்கள் முறையே 1:2:1 என்ற விகிதத்திலேயே இருந்தன. இந்த விகிதத்தைக் கண்ட மெண்டல் இதற்கு விளக்கம் காண முயன்றார்: அதில் வெற்றியும் பெற்றார்.