உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாழையடி வாழை

பாலணுக்களின் தூய்மைபற்றிய விதியும், கலப்பின உயிரணுக் களிடையே தற்செயலாக இணை ஜீன்கள் விகியோகமடையும் விதியும் உயிரணுக்கள் தனித்தனியாகப் பிரியும் முறையையும் அவற்றின் எண் விகிதத்தையும் எளிதாகவும் நம்பகமான முறை யிலும் விளக்குகின்றன. தூய்மையான வெண்ணிற, செங்கிற மலர் களைத் தரும் தாவரங்கள் தூய்மையான பூக்களையே தருகின்றன. இவற்றுள் வெண்ணிறப் பூக்களிடையே தன் - மகரந்தக் கலப்பும் செங்கிறப்பூக்களிடையே தன் - மகரந்தக் கலப்பும் செய்தால் அவை முறையே வெண்ணிற செங்கிறத் தாவரங்களையே தருகின்றன. இவை இரண்டால் உண்டாகும் கலப்பினங்கள் செந்நிறத்திற்குக் காரணமான ஜீனை ஒரு பெற்றோரிடமிருந்தும் வெண்ணிறத் திற்குக் காரணமான ஜீனை’ மற்றொரு பெற்றோரிடமிருந்தும் பெற்று வெண்-சிவப்பு நிறத்தைப் பெறுகின்றன. கலப்பினங்களின் பாலணுக்கள் தூய்மையாக இருத்தல் வேண்டுமாதலின், அவற்றுள் பாதி வெண்ணிறத்தைத் தருவனவாகவும் பாதி செங்கிறத்தைத் தருவனவாகவும் உள்ளன. இது பெண்கலப்பினத்திற்கும் ஆண் கலப்பினத்திற்கும் பொருந்தும். இரண்டாவது தலைமுறைத் தாவரங் களைக் கலபபினத் தாவரங்களிலிருந்து உண்டாக்கும்பொழுது, இரண்டுவிதமான விந்தணுக்களும் (சிவபபு வெண்மை நிறத்திற்குக் காரணமான மகரந்தங்கள்) இரண்டுவிதமான முட்டையணுக்களும் (சிவப்பு, வெண்மை நிறத்திற்குக் காரணமான முட்டைகள்) சம எண்ணிக்கைளில் கிடைக்கின்றன. இந்த இரண்டுவகை மகரந்தங் களும், இரண்டுவகை முட்டைகளுடன் சேர்ந்து கருவுறுங்கால் கீழ்க்கண்டவாறு நான்குவிதமான கருவுறுதல்களைத் தற்செயல் அறுதியிடுகின்றது:

1. செந்நிறத்திற்குக் காரணமான முட்டை செங்கிறத்திற்குக்

காரணமான மகரந்தத்தால் கருவுறுதல்;

2. செந்நிறத்திற்குக் காரணமான முட்டை வெண்ணிறத்

திற்குக் காரணமான மகரந்தத்தால் கருவு துதல்;

3. வெண்ணிறத்திற்குக் காரணமான முட்டை செந்நிறத்திற்

குக் காரணமான மகரந்தத்தால் கருவுறுதல்: