உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயமும் தெளிவும் 97

கிற்பதால் இவையும் முறையே சிவப்பாகவும் கறுப்பாகவும் உள்ளன. கான்காவதில் வெண்மை கிற ‘ஜீன்'களே இருப்பதால் அது வெண்மையாகவே இருக்கும் (Tr). பட்டாணியின் பூக்களில் நான்கில் ஒரு பாகம் வெண்மை நிறமாகவும். எலிக்குட்டிகளில் நான்கில் ஒருபாகம் வெண்மையாகவும் இருப்பதற்கு இதுவே காரண மாகும.

நிறத்திற்குக் காரணமான ஜீன்களில் சில எப்படி கிற்கின் றனவோ அதுபோலவே இன்னும் வேறு வேறான பல பண்புகளுக் கான ஜீன்களிலும் ஓங்கி நிற்கும் ஆற்றலுடையவை உள்ளன. மற்றும், ஓங்கி நிற்பதும் பின்தங்கி நிற்பதும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பட்டாணியைப் பொறுத்த வரையில் சிவப்பு நிறமும், எலியைப் பொறுத்த வரையில் கறுப்பு நிறமும், முற்றிலும் ஓங்கி நிற்கின்றன. முதல் கலப்பினச் சேர்க்கை யில் சிவப்பு நிறப் பூக்களும், காரெலிகளுமே தோன்றுகின்றன. ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த வெள்ளைச் சேவலுக்கும் சிவப்புக் கோழிக்கும் பிறக்கின்ற குஞ்சுகள் வெள்ளையாக இருந்தாலும் அவற்றின் சில இறகுகள் மட்டிலும் சிவப்பாக இருக்கின்றன. இவ் வாறு ஓங்கி நிற்பதிலும் பல தரங்கள் உள்ளன. சில முற்றிலும் ஓங்கி நிற்கும்; சில ஓரளவிற்குத்தான் ஓங்கி நிற்கும்.

இவ்விடத்தில் இன்னும் ஓர் ஐயம் எழுகின்றது. கருமை நிற முள்ள ஓர் ஆணுக்கும் பொன்னிறமுள்ள ஒரு பெண்ணுக்கும் குழந்தைகளின் நிறம் மேற்கூறியபடி அமையாமல் பல்வேறு விதமாக அமைவதற்கு என்ன காரணம் கூறுவது என்பதுவே அது. கிறத்திற் குரிய ஜீன்கள் சரிசமமான ஆற்றலுடையனவாக இருப்பின் எல்லாக் குழவிகளும் பொன்னிறமும் கருமை நிறமும் சமமாகக் கலந்த மாகிறமுடையனவாக இருக்கவேண்டும்; அல்லது ஏதாவது ஒரு நிறம் ஓங்கி கின்றால் அதன்படியே எல்லாக் குழந்தைகளும் இருக்கவேண்டும். ஆனால் ஆராய்ாது பார்த்தால் பொன்னிறம், கருமை நிறம் இவற்றிற்கிடையே பலவிதமான கலவைகள் உள்ள கிறங்களில் குழந்தைகள் காணப்பெறுகின்றன. இதற்குக் காரணம் என்ன? மானிட நிறக்கோல்களில் நிறத்திற்குரிய ஜீன்கள் பல

வா.-7