உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதச் சிற்பிகள்

இந்த அணுயுகத்தில் நம்பத்தகாத மிகச்சிறிய பொருள்களி லிருந்து நம்பத்தகாத மிகப் பெரிய பொருள்கள் தோன்றுகின்றன என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். இந்த அநுபவத்தை யுடைய நமக்குக கண்ணுக்குப் புலனாகக்கூடிய மிக நுண்ணிய பொருளைவிடப் பலகோடி மடங்கு சிறிதாகவுள்ள ஜீன்'பொன்னிறத் திற்கும் கருமை நிறத்திற் கும் ஒரு குள்ளனுக்கும் ஓர் ஆறடி மனித னுக்கும், சில அரிய சந்தர்ப்பங்களில் நல்ல மனிதனுக்கும் பைத்தியக் காரனுக்கும் இடையில் பல்வேறுவிதமான மனிதர்களை உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது இயற்கைக்கு மீறிய செயல் என்று தோன்றுவதற்கு இடம் இல்லை. இந்த நுண்ணிய ஜீன்கள் கருவுறும் நாளிலிருந்து நாம் பிறக்கும் நாள்வரையும், அதற்குமேல் நம் வாழ்நாள் முடியும்வரையிலும் எந்த முறைகளில் தம் அரிய செயல்களை ஆற்றுகின்றன என்பதை ஓரளவு கூறுவோம்.

முதலாவதாக ஜீன்’ என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பொருளும் அணுத்திரளைகளால்’ ஆனது என்றும், நம்மைச் சுற்றியுள்ள காற்று, நாம் வசிக்கும் பூமி. நாம் உண்ணும் உணவு, பருகும் நீர் முதலிய இவ்வகிலத்திலுள்ள ’ அனைத்தும் அணுத்திரளைகளால் ஆனவை என்பதையும் அறி வோம். இந்த அணுததிரளைகள் அணுக்களாலானவை. ஆகவே,

sogos 606m - Molecule. sol50th - Universe. <spiggy - Atom.