உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? 02 வாழையடி வாழை

வியத்தகு செயல்களைக் கொண்டு அவற்றை அற்புதச் சிற்பி களாகக் கருதலாம். உலகிலுள்ள எந்தத் தொழிற்சாலைகளிலும் இத்தகைய பல்வேறு விதத் தொழிலாளிகளையும் தனித்தன்மை வாய்ந்த சிற்பிகளையும் காண்டல் அரிது; அவர்கள் புரியும் விசித்திரத் தொழில்களையும் பார்த்தல் அரிது. இந்த ஜீன் களிடையே சிற்பிகள், பொறியியல் வல்லுநர்கள். நீர்க்குழலைச் சரிப்படுத்துவோர்கள், ஒப்பனை செய்வோர்கள், வேதியியல் வினைஞர்கள், கலைஞர்கள், மருத்துவ வல்லுநர்கள், உணவுத்துறை வல்லுநர்கள், சுண்ணவேலைக்காரர்கள், தச்சுவேலை செய்வோர், சாதாரண உழைப்பாளிகள்-போன்ற பல்வேறுபட்டவர்களைக் காணலாம். இவர்கள் யாவரும் 23 வரிசைகளில் இணைந்து செயற்படுகின்றனர் (நிறக்கோல்களில்). இங்ஙனம் தாயிடமிருநது வரும் 23 வரிசைத் தொழிலாளர்களும் தந்தையிடமிருந்துவரும் 23 வரிசைத் தொழிலாளர்களும் தக்கமுறையில் பொருத்தமுற்றுப் புதிய மனிதனை உண்டாக்குவதாகக் கருதலாம். அன்றியும். ஒவ்வொரு தொழிலாளர் வரிசையிலிருந்தும் எண்ணற்ற தடவை களில் அதே போன்ற வரிசைத் தொழிலாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கும் ஆற்றலும் அத் தொழிலாளர் வரிசையிடம் அமைந்திருக்கின்றது.

இப்பொழுது கருவுறும் நேரத்தைச் சிறிது சிந்தித்துப் பார்ப் போம். நம்முடைய தாய்வழியாக வரும் தொழிலாளர் வரிசைகள் ஒரு சிறிய குகையில் அடைந்து ஊட்டம் தரும் பொருளால் சூழப் பெற்றுள்ளன. இதுதான் முட்டை எனபது. திடீரென்று இந்தச் சூழ்நிலைக்கரு அதேபோல் தந்தைவழியாக வரும் தொழிலாளர் வரிசைகளைககொண்ட சிறிய குகை ஒன்று த ள்ள ப் பெறு கின்றது. கிட்டத்தட்ட ஒரே சமயததில் இரண்டு குகைகளும் திறக்கின்றன; இப்பொழுது ஆயிரக்கணக்கான ஜீன் தொழி லாளர்கள் தொழிற்படக் கிளர்ந்தெழுகின்றனர்.

நீண்ட நாட்கள் சிறைப்பட்டுக் கிடந்தவர்கள் வி டு த ைல யடைந்ததும் முதலில் உண்ணும் வேலையில் இறங்குகின்றனர். உறங்கிக் கிடந்த கும்பகருணன் விழித்தெழுந்ததும் உண்பதைப் பற்றிப் படித்திருக்கின்றோம்; அம்மாதிரி இவர்கள் உண்கின்றனர்.