பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதச் சிற்பிகள் 105

என்று அமைகின்றன. பெண்களிடம் 23-வது வரிசை XX என்றும். ஆண்களிடம் 23-வது வரிசை XY என்றும் அமையும் (படம்-32). இறுதி வரிசைகளைத்தவிர, ஒவ்வொரு வரிசையிலும் ஒரே எண்ணிக்கையுள்ள வேலையாட்களே இருபபர்; ஒவ்வோர் இணையிலும் நேருக்கு நேராகவுள்ள தொழிலாளர்கள் ஒரே வகையைச சார்ந்தவர்களாகவும் இருப்பர். சிற்பி சிற்பியோடும், தசசன் தச்சனோடும் இங்ங ைமே ஒரே ஒழுங்கில் இணைவதைப் படத்தை உற்று நோக்கித் தெளிவுபெறுக. எனவே, நம் ஒவ்வொரு வருடைய வாழ்வும் தாயினிடமிருந்து ஒருவரும், தந்தையினிடமிருந்து ஒருவருமாக வந்துசேர்ந்த பல்வேறு வகை இணைத் தொழிலாளர் களைக் கொண்டும் தொடங்குகின்றது என்பதை நாம் அறிகின்றோம்.

இவ்விடத்தில் இன்னொரு முக்கியமான செய்தியை நினைவு கொள்ளல் வேண்டும். ஒவ்வோர் இணையிலும் உள்ள தொழி லாளர்கள் இருவரும் ஒரே மாதிரியாக வேலை செய்வர் என்று சொல்வதற்கில்லை. எடுத்துக்காட்டாக இரண்டு தச்சர்களைக் கொண்டு ஒரு நாற்காலியைச் செய்விக்கும்பொழுது ஒவ்வொருவரும் செயல்திறனிலும் பிறவற்றிலும் வேறுபடுவதைக் காண்கின்றோ மன்றோ? இங்ஙனமே இந்த வரிசைகளிலுள்ள தொழிலாளர் இணை களிலுள்ளவர்களும் தம் செயல்திறனில் வேறுபடுவர். ஒரு ஜீன்’ மிகத் திறமையாகவும் மற்றொன்று திறமையற்றும் இருக்கும்; ஒன்று நாம் எதிர்பார்க்கும் வண்ணம் செயலாற்றும்; மற்றொன்று முற்றிலும் அதற்கு மாறாகச் செயல்படும். எனவே, ‘ஜீன்'களில் வன்மையானவையும் ("ஓங்கி நிற்பவை), மென்மையானவையும் ('பின்தங்கி நிற்பவை'), சுறுசுறுப்பானவையும் சோம்பலுடைய வையும். உயரினமுடையவையும் தாழ்ந்தவையும், ஆக்கவேலை செய்பவையும், அழிவுவேலை செய்பவையும் என்று இங்ஙனம் பல்வேறு விதமாக இணைதல் உண்டு. மேலும், உயிரணுவின் சூழ்நிலையும்-வேதியியல் அமைப்பு, ஊட்டநிலை, உடல்நலநிலை போன்றவை-அவை அமைந்துள்ள நிலையும் ஜீனின வேலையைப் பெரிதும் பாதிக்கச் செய்யும். உணவுமுறை, காலநிலை, உடல்நல நிலை, செய்யும் இடத்தின் சூழ்நிலை ஆகியவை எந்தத் தொழிலாளர் களையும் பாதிக்கின்றன அல்லவா?