பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 16

முகத் தோற்றம்

அவர் முதத்தில் இலக்குமி தாண்டவமாடுகின்றாள்’ அவர் முகத்திலே விழித்தாலும் மூன்று நாளைக்குச் சோறு அகப்படாது’ என்ற பழமொழிகளை நாம் அடிக்கடி பலர் வாயினின்று பிறப் பதைக் காண்கின்றோம் ; கேட்கின்றோம் இவ்வாறு ஒருவரது முகத தோறறத்தில் ‘அழகும் அருளும் அதிர்ஷ்டமும்’ அமைவது ஜீன்களின் செயலைப் பொறுத்துள்ளது. மூக்கு, கண்ணின் வடிவம், காதுகள், உதடுகள் முதலியவை ஒருங்கு சேர்ந்துதான் முகத் தோற் றத்திற்குக் காரணமாகின்றன. இதில் ஜீன்கள் ஓங்கி கிற்றலும் பினதங்கி நிற்றலும் தெளிவாக அறியப்பெறவில்லை : காரணம் சிற்பத் தொழிலில் பங்குபெறும் ஜீன்களின் செயல்களை இன்றும் திட்டமாக அறியக் கூடவில்லை. தவிரவும், இதில் பல ஜீன்கள் சேர்ந்தே ஒருவிதத் தோற்றத்தை உண்டாக்குவதற்குத் காரணமா கின்றன. அன்றியும், இத்தகைய ஜீன்களை இனங்கண்டு அறிதலிலும் சங்கடங்கள் உள்ளன.

முகம் முழுவதையும் உற்று நோக்குவோம். சாதாரணமாக ஒருவரை முதன்முதலாகப் பார்க்கும்பொழுது அவரது முகந்தானே நம்மைக் கவர்கின்றது? ஒவ்வொரு சிறபபுக் கூறும் ஏனைய சிறப்புக் கூறுகளின் தொகுதியினால்-உளவியலார் கூறும் முழு கிலைக் காட்சியினால்’-அதிகமாகப் பாதிக்கப்பெறுகின்றது. பிறப்பதற்கு முன்னர் தாயின் கருவில் முகம் அமையும்பொழுதும் பிறந்தபிறகு முகம் துலக்கமுறும் கிலைகளிலும், முகம் முற்றிலும்

1. சிறப்புக் கூறு - Feature. 2. முழுநிலைக் காட்சி - Gestalt.