உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகத் தோற்றம் 1 09

முக வேறுபாட்டிற்குக் காரணமாகின்றன. எனவே, முக அமைப் பிற்குப் பல்வேறு கூறுகள் காரணமாகின்றன என்று அறியக் கிடப்பதால் ஒரு குறிப்பிட்ட முக அமைப்பு மரபுவழியாக இறங்கும் என்று கூறுவது முற்றிலும் பொருந்தாது.

பெரும்பாலும் ஒவ்வொரு சிறப்புக் கூறு அமைவதில் தனித் தனியாகச் சில பிரத்தியேகமான ஜீன்கள் பங்கு பெறுகின்றன. இந்த ஜீன்கள் யாவும் சாதாரணமாகத் தமக்கு அண்மையிலுள்ள ஜீன்களுடன் இணைந்தே செயற்படுகின்றன. எனினும், சில சமயம் அவை தொடர்பின்றியும் செயற்படுதல் கூடும். காதுகளும் மூக்கும் சேய்மையிலிருப்பதால் அவற்றின் அமைப்பிற்குக் காரண மாகவுள்ள ஜீன்கள் சுதந்திரத்துடன் இயங்குகின்றன. ஆயின், வாயின் அமைப்பிற்குக் காரணமான ஜீன்கள் தமது சுற்றுப்புற உறுப்புகளுக்குக் காரணமான ஜீன்'களின் செல்வாககினைப் பெறு கின்றன.

இங்ஙனம் அணித்தாக அமைந்துள்ள சிறப்புக் கூறுகள் எவ் வளவு நுண்மையாக அமைகின்றன என்பது கூர்ந்து ஆராய் வோருக்கே நன்கு புலனாகும். முகத்தில் இணை இணையாகவுள்ள சிறப்புக் கூறுகளின் அமைப்பினை எண்ணிப் பாருங்கள். ஜீன்கள் இச் சிறப்புக் கூறுகளை மிகச் சிறிய விவரங்களிலும் பங்குகொண்டு சிறப்பான முறையில் செயற்படாவிடில், ஒரு கண் மற்றொரு கண்ணிலும் முற்றிலும் மாறாக அமைந்துவிடும். ஒரு காது பிறி தொரு காதினும் வேறாக மாறி அமைந்துவிடும். இவை யாவும் நம்முடைய உடலில் இரட்டையாவுள்ள (Duplicate) ஜீன்களால் அற்புதமாக நடைபெறுகின்றன.

இனி, இச் சிறப்புக்கூறுகளைத் தனித்தனியாய் ஆராய்வோம்.

மூக்கு: மூக்கு அமைவதில் மூன்று அல்லது நான்கு ஜீன்கள் பங்கு பெறுகின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மூக்கின் மேற்புற எலும்பு அமைப்பில் (அதன் வடிவம், உயரம், நீளம்) தனி ஜீன்களும், மூக்குத் துவாரங்கள் அமைப்பில் (அகலம், வடிவம், பருமன்) தனி ஜீன்களும், மூக்கின் அடித்தளமும் அது மேலுதட்டுடன் சேரும் இடமும் அமைவதில் தனி ஜீன்களும், மூக்கின் குமிழ்