உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகத் தோற்றம் 1 15

றது. இடப்புறமிருந்து வலப்புறமாகச் சுழிதல், வலப்புறமிருந்து இடப்புறமாகச் சுழிதல், இரட்டைச் சுழிகள் அமைதல் - போன்றவை அவற்றையுடையவரின் குணப்பண்பினை ஒரளவு உணர்த்துகினறன என்பதற்கு இதுகாறும் சான்றுகள் அறியக்கூடவில்லை. முகம், அக்குள் போன்ற இடங்களில் மயிர் வளர்தலில் சுரப்பிகளின் செல் வாக்கும் தலைகாட்டுகின்றது.

மேற்கூறிய மாற்றங்கள் யாவற்றிலும் சூழ்நிலை கணிசமான அளவுககுப் பங்கு பெறுவதில்லை என்றே சொல்லலாம். ஒருவரது வாழ்க்கை முழுவதிலும் அவரது முகத்தின் முழு அமைப்பில் சதா மாற்றம் நிகழ்ந்துகொண்டே வருகின்றது. உண்ணும் பழக்கங்கள், தூங்கும் முறை. பேசும் முறை, எண்ணும் முறை, உள்ளக்கிளர்ச் சிகள், பல்வேறு நடத்தை மாறுபாடுகள், நோய்கள், கிழத்தன்மை - இவை யாவும் இம் மாற்றத்தில் பங்கு பெறுகின்றன.