உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயக்கம் 127

களின் விளைவுகளில் குறிப்பிடததக்க இயல்பிகந்த பண்புகள் திரும்பத் திரும்பத் தலைகாடடுமபொழுதுதான் மரபு வழியாக இறங்கும் வேறுபாடுகள் தாமாகத் தட்டுப்படும்.

சுரப்பிகட்கு அடுத்தாற்போல் நமது உடலில் மிக முக்கியமான ஒற்றை உள்ஸ்ரீப்பு மூளையாகும். மானிட மூளைக்கும் பிராணி களின் மூளைக்கும் இடையே காணப்பெறும் ஏராளமான வேறு பாடுகள் குடிவழியாக அமைகின்றனவாயின், ஒரு மனிதருக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே காணபபெறும் மூளையின சிறு வேறுபாடுகளும் மாறுபாடுகளும் மரபுவழியாகவே அமைய வேண்டும். தனிப்பட்டோர் வாழ்க்கையைத் தொடங்கும்போதே அவர்களின் மூளையமைப்பில் ஏராளமான வேறுபாடுகள் காணப் பெறுகின்றன என்றும். இவற்றுள் மிகவும் எடுப்பாகவுள்ள அமைப்பு மாறுபாடுகள் குடிவழியாக வருதனவாகக் காட்டக்கூடும் என்றும், அங்ஙனமே பெரு மூளையமைப்புகளில் காணப்பெறும் ஒருசில சிறு வேறுபாடுகளும் மரபுவழியாகவே அமைந்தன என்றும் ஆயவாளர்கள் கருதுகின்றனர்.

மேற் கூறியவாறே இதயம், கல்லீரல், நுரையீரல்கள், தீனிப்பை” போன்ற ஏனைய உள்ஸ்ரீப்புகளின் வடிவத்திலும் அமைப்பிலும் காணபபெறும் வேறுபாடுகளும் மரபுவழியாகவே வந்தன என்றும் மெய்ப்பிக்கலாம். ஆனால் சாதாரண மனிதர் களிடம் இவ்வேறுபாடுகளை இனங்கண்டு வகைப்படுத்தி ஆராய் வதில் இதுகாறும் யாதொரு முயற்சியும் மேற்கொள்ளப் பெற வில்லை. சாதாரணமாக எளிதில் கணடறியக்கூடிய இயல்பிகந்த பண்புகளையும், அல்லது செயற்படுவதிலுள்ள குறைகளையும் கொண்டே இவை குடிவழியாக இறங்குவதுபற்றித் தெளிவாக அறிந்துகொண்டுள்ளோம்.

மேற்கூறியவாறு காணப்பெறும் இவ்வுள்ஸ்ரீப்புகளிலும் பிறவற்றிலும் காணபபெறும் வேறுபாடுகள் யாவும் அமைவதற்கு முக்கிய காரணம் மரபுவழியா அல்லது சூழ்நிலையா என்பதுதான் கம்முன் கிற்கும் பிரச்சினையாகும். இந்த இரண்டு கூறுகளும்

8. soft’sol 1 - Stomach.