உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'’, 42 வரழையடி வாழை

(3) மூன்று முட்டைகள் தனித்தனியாகக் கருவுற்று மூன்று குழவிகள் பிறக்கின்றன. மூன்றும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

இரண்டாவது முறையில் பிறந்ததற்கு மூன்று அமெரிக்க அறிவியலறிஞர்கள் எடுத்துக்காட்டுக்களாவர்: இராபர்ம்” என்பார் இயற்பியல் அறிஞர் : வாலஸ்” என்பார் வேதியியல் வல்லுநர். இவர்கள் இருவரும் ஒரு கரு இரட்டையர். மால்கம்’ என்பார் இரண்டாவது கருவில் தோன்றியவர் இவர் விலங்கியலறிஞர்.”

நான்கு கோவைக் குழவிகள் : ஒரே கருப்பத்தில் கான்கு குழவிகள் ஏற்படுவது கீழ்க்கண்ட முறைகளில் நிகழலாம் :

(1) ஒரே முட்டையிலிருந்து நான்கு குழவிகள் தோனறலாம்: இவை நான்கும் ஒரே மாதிரியாக-அச்சுக் குழவிகளாக-இருக் கும். 1930இல் அமெரிக்காவில் மிச்சிகன் என்ற இடத்திலும், 1949இல் கனடாவில் ஒண்டாரியோ என்ற இடத்திலும் இவ்வகைக் குழவிகள் பிறந்தனவாக அறிகின்றோம்.

(2) இரண்டு முட்டைகளிலிருந்து கான்கு குழவிகளும் தோன்றலாம். அப்படியாயின் (அ) இரண்டு முட்டைகளிலிருந்தும் தனித்தனி இரட்டையர் தோன்றலாம்; இவ்வாறு தோன்றி பிழைத் துள்ள குழவிகளை மருத்துவ உலகம் காணவில்லை; (ஆ) ஒரு முட்டையில் முக்கோவைக் குழவிகளும், இரண்டாவது முட்டையில் ஒரு சகோதரக் குழவியும் தோன்றலாம்: முதல் மூன்றும் ஒரு பாலினத்தைச் சார்ந்தனவாக இருக்கும்; சகோதரக் குழவி எப்பாலையும் சார்ந்திருக்கலாம். இம் முறையில் 1936இல் அமெரிக்காவில் நியுஜெர்ஸி என்ற இடத்தில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர் என்றும், 1941 இல் கெண்டுக்கி என்னுமிடத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் பிறந்தன என்றும் அறிகின்றோம்.

(3) மூன்று முட்டைகளிலிருந்து நான்கு குழவிகள் தோன்ற லாம். ஒரு முட்டையிலிருந்து அச்சு இரட்டையரும், ஏனைய இரு

2. QTIruffl’ - Robert. 8. Sursogio - Wallace. 4. unirsbG rsbih - Malcolm. 5. SsoiestuusosG - Zoologist. 6. நான்கு கோவைக் குழவிகள் - Quadruplets.