உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 21

திய ஜின்கள்

மோட்டார் வண்டி, மோட்டார் சைக்கிள் போன்ற ஊர்தி களைச் செய்யும் தொழிலதிபர்கள் அவற்றை நன்முறையில் பரி சோதித்த பிறகுதான் விற்பனைக்கு அவற்றை அனுப்புவர். குற்றங் குறைகளை அகற்றிய பின்னர்தான் வண்டிகள் விற்பனைக்கு வரும். இது தன்-மதிபபுள்ள தொழிலதிபர்களின் பொறுப்பு. ஆனால் மானிடப் பொறிகளை அமைக்கும் இயற்கையன்னை இததகைய பொறுப்பினை எடுத்துக்கொள்வதில்லை. கண்ணில்லாதவர்கள், காலில்லாதவர்கள், கையில்லாதவர்கள், ஆறுவிரல் பேர்வழிகள், மூன்றுவிரல் நபர்கள் - போன்ற எண்ணற்ற குறையுள்ள மனிதர் களையும் இயற்கையன்னை படைக்கின்றாள் படைத்து மகிழ்கின் றாள் என்றே கொள்ளவேண்டும்! பெரும்பாலான பிறவிகள் தற் செயலாக நேரிடுகின்றன; பிறவிச் செயல்களில் கெட்ட பொருள்கள் பங்கு கொள்வதாலோ, அல்லது வாய்ப்பான சூழ்நிலைகள் அமை யாததன் காரணமாகவோ இங்ஙனம் நேரிடலாம். ஏனையவற்றில் இத்தகைய இயல்பிகந்த பிறவிகள் இடையறாது நிகழ்ந்து வரும் பிறவிச் சோதனையில் உடன்-விளைபொருள்களபோல அமைகின் றன. என்றாலும், இறைவன் படைப்பில் கிகழும் சில அதிசயங்கள் இன்னும் நாம் காணமுடியாத மறைபொருளாகவே உள்ளன.

உண்மையில் நமது உடலாகிய பொறியை நாம் உண்டாக்கிய அதி நுட்பமான தாமியங்கி, வானவூர்தி, அல்லது ஒரு நுட்பமான அறிவியல் ஆய்கருவி இவற்றுடன் ஒபபிடுதல் சரியன்று. காரணம், மானிட உடலை நோக்குமிடத்து இக கூறியவை யாவும் பண்படாத பொறிகள் என்றே சொல்லத் தோன்றும். நமது உடல் இயற்கை