உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வாழையடி வாழை,

களில் ஒன்று இந்த ஜீனைப் பெற்றுத் தன்னைப்போலவே இந்தப் பண்புக்கூறினை வெளிக்காட்டாமல் ‘ஊர்தியாக’ அமையும்.

இன்னோர் உண்மையும் ஈண்டு கவனிக்கத் தக்கது. பழங்காலத் தில் சூழ்நிலைபற்றிய நிலைகளை மரபுவழியாக அமைந்தவை என்று தவறாகக் கருதியது போலவே, இன்று மரபுவழியாக வநத வற்றையும் சூழ்நிலையால் ஏற்பட்டவை என்று தவறாகக் கருதப் பெற்று வருகின்றன. இன்றைய தீவிர சூழ்நிலை வாதிகள் ஒரு நோயில் சூழ்நிலையையும் குடிவழியையும் தெளிவாகப் பிரித்தறிய இயலாது என்பதைப் புறக்கணிக்கின்றனர். இந்த இரண்டு கூறு களும் தீவிரமாகப் பங்குகொண்டால் பல நிலைகளை ஏற்படக் காரண மாகின்றன என்று கால்வழியியல் அறிஞர்கள் மெய்ப்பித்துள்ளனர். ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட ஜீனைச் சேர்வதை மட்டுமின்றி அவ ருடைய உடலமைப்பு முழுவதையும் பொறுத்தே நோய் ஏற்மடுகின் றது என்பதை முக்கியமானதாகக் கொள்ளவேண்டும். சூழ்நிலை யைப் பொறுத்த ஒரு நிலை மனிதர்களைத் தாக்கும்பொழுது அவர் வர்களுடைய முழு உடலமைப்பையொட்டிப் பலவேறு விதமாகத் தாக்குகின்றது. முக்கியமாக ஆண்களிடமும் பெண்களிடமும் இங்ஙனம் தாக்குவதில் தெளிவான வேறுபாட்டைக் காணலாம். பெரும்பாலும் சுரபபிகள்பற்றிய நோய்கள் பெண்களுக்கேயுள்ள நோய்கள். இவற்றைத் தவிர, ஆண்களே பெண்களைவிட இங் நோய்களால் அதிகமாகத் தாக்கப்பெறுகின்றனர். அவர்களுடைய பல்வேறு முறைகளில் வெவ்வேறாக அமைத்திருப்பதாலும், பல் வேறு விதமாகச் செயற்படுவதாலும் இங்கிலை ஏற்படுகின்றது. பால் வேற்றுமையின்றி, உடலமைப்பில் வேற்றுமையுள்ளவர்கட்கும் இங்கிலை பொருந்தும். இக காரணம்பற்றி ஒருசில குடும்பங்களில் உள்ளவர்கள் பெரிய அம்மை, இருமல் நோய், குலைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் அதிகமாகத் தாக்கப்பெறுகின்றனர். இத்துறையில் ஆராய்ச்சி மிகமிக மரபுவழி பங்கு பெறாத நோயே. இல்லை என்ற உண்மையை நாம் அறிதல் கூடும்.

10. 2ntiff - Carrier.

1 1. @5›so 6urssir - Environmentalists,