பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிய நோய்கள் $ 65

நான்கு பெண்கட்கு வருகின்றது என்று கணக்கிட்டுள்ளனர். சாதாரணமாகப் பெண்களின் உடல் சரியாகச் செயற்படுவதற்கு அதிக மான அயோடின் தேவைப்படுகின்றது. ஆகவே, இவர்களிடம் இச் சத்து குறைவாக இருப்பினும், இதன் காரணமாக இக் குடும்பத்தில் அயோடின் சத்துக் குறைவு காணபபெறினும், இக் குடும்பத்திலுள்ள பெண் குழவிகள் அதிகமாக இந் நோயினால் தாக்கப்பெறலாம் ஒரு தாயிடம் அயோடின் குறைவு காணப்பெற்றால் அவளுக்கு ஒரு குள்ளன் பிறப்பான். இக் குழந்தை மனவளமற்ற மந்தனாகவும் இருப்பான்.

(6) செரிமான நோய்கள் : செரிமான உறுப்புகளையொட்டி யும் செரிமானச் செயல்களையொட்டியும் பல நோய்கள் உள்ளன. ஆனால் நீரிழிவு நோயினைத் தவிர ஏனையவை யாவும் தீய ஜீன் களால் நேரிடுகின்றன என்று மெய்ப்பிக்கப்பெறவில்லை.

தீனிப்பையிலும் குடல்களிலும் ஏற்படும் புண்கள் நரம்புச் சோர் வினால் ஏற்படுவதாகச் சொல்லப்பெறுகின்றது. இத்தகைய புண் களில் பாதிக்கு மேல் தொல்லை, கவலை அல்லது வேறு ‘ஆளுமைக் கோளாறினால் உண்டாகவிலலை என்று மெய்ப்பித் துள்ளனர். இந் நோய் பெண்களை விட ஆண்களிடமே அதிகமாக உண்டாகின்றது; பெண்களை விட ஆண்கள் நான்கு மடங்கு இறப் பதற்கும் காரணமாகின்றது.

சிறு நீரக நோய்களில் (Nephritis) இறப்பில் கொண்டு செலுத் தும் நோய் மரபுவழியாக இறங்குகின்றதென்று சொல்லுவதற்கில்லை. பெண்களிடம் இது கருவுற்ற பின்னர் பின்விளைவாகத தோன்றுகின் றது. எனினும், இந் நோய் ஆண்களிடமே அதிகமாக உண்டாகின் றது. சிறுநீரகத்தைத் தாக்கும் அரிதாகவுள்ள பாலிசிஸ்டிக் (Polycystic) நோய் கருவுற்ற பெண்களிடம் விபத்தினை விளை விக்கக்கூடியது. இது மரபுவழியாக வருவதாகக் கருதபபெறுகின் றது. இஃது ஓங்கி நிற்கும் ஜீனினால் ஏற்படுகிறதாக நம்பபபெறு கின்றது.

15. Gsirsrsr - Cretin.