பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வாழையடி வாழை

தாயின் வயிற்றிலேயே சாகும் ஆண் குழவிகளின் தொகையே அதிகம். மேலும் பிறக்கும் பொழுதில் இறப்பதிலும், பிறவி சார்ந்த இயல்பிகந்த பண்புகளுடன் பிறப்பதிலும், முதலாண்டிலேயே மண் ணுலக வாழ்வினை ப்ேபதிலும் பெண் குழவிகளைவிட ஆண் குழவி கள் 30 சதவிகிதம் அதிகமிருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். ஆண் குழவியொன்றும் பெண் குழவியொன்றும் வாயிற்படியில் தடுமாற் றம் அடைந்து விழுவதாக வைத்துக்கொண்டால் ஆண் குழவியே அதிக விபத்தினை அடைகின்றது.

பிள்ளைப் பருவத்தில் இருவரிடையேயும் முக்கியமான விபத் துகள் ஏற்படுவது குறைவதாகக் காணப்பெற்றாலும். இப் பருவத்திலும் ஆண் குழவிகள் மரிப்பதையே அதிகமாகக் காண்கினறோம். குமரப் பருவத்தில் இங்கிலை உணர்ந்து கொண்டே சென்று நடுப்பரு வத்தில் தெளிவாக உயர்ந்த நிலையைக் காண்கின்றோம். நீரிழிவு நோய், பெண்களுக்கே உரிய புற்று நோய்கள் (எ-டு. கொங்கை, கருப்பை, சூற்பை இவற்றில் ஏற்படுவன), தொண்டைக் கழலை இவற்றால் மரிப்பவர்களை நீக்கினால் ஆண்கள் இறப்பதே அதிக மாகக் காணப்பெறுகின்றது. மேலும் சூழ்நிலைபற்றிய கூறுகளை இரு பாலாரிடையே ஒன்றுபோலிருக்குமாறு செய்துவிட்டாலும் பெண் களே நல்ல வாய்ப்புகள் பெறுகின்றனர். இந் நிலையிலும் ஆண்கள் இறப்பதே அதிகமாகவுள்ளது. இவற்றிற்கெல்லாம் காரணம என்ன?

உடலமைப்பிலும் உடல் செயற்படு முறைகளிலும் ஆண்களுக்கு உள்ள குறைகளைத தவிர, இயற்கை அன்னையே இவர்கட்கு ஒரு பிரத்தியேகமான குறையை அமைத்துவிட்டுள்ளாள். கருவுறும் பொழுதே பெண் குழவியிடையே இரண்டு X-நிறக்கோல்கள் (தாய் வழியே ஒன்றும், தந்தை வழியே ஒன்றுமாக வகதவை) அமைகின் றன என்றும், ஆண் குழவியிடையே தாய் வழியாக வந்த ஒற்றை X-நிறக்கோலும், தந்தை வழியே வந்த ஒரு மிகச் சிறிய Y-நிறக் கோலும் அமைகின்றன என்றும் நாம் அறிவோம். ஆணின X-நிறக் கோலில் ஏதாவது தீய ஜீன்கள் அமைந்துவிடடால் தன் சகோதரியை விட இவனுக்கு விபத்து நேரிடும் வாய்ப்பு அதிகமாகின்றது. குறை வினை விளைவிக்கும் ஜீன் பின்தங்கும் நிலையிலிருப்பவர்கட்கெல் லாம் இது நேரிடுகின்றது. இதற்குக் காரணம் என்ன ?