பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184. வாழையடி வாழை

பார்ப்பதற்குச் சட்டெனத் திரும்பிக் கணுக்கால்’ எலும்பை முறித்துக் கொண்டதாக அறிகின்றோம். இந் நிலையும் செவிட்டு நிலையும் குறைபாடுள்ள பற்களும் சேர்ந்து ஓங்கி நிற்கும் ஜீனினால் நேரிடு கின்றதாகக் கண்டறிந்துள்ளனர். முதுகெலும்புத் தொடரில் நேரிடும் உருவக் குலைவும் இதனால்தான் ஏற்படுகின்றது. மண்டையெலும் பின் கூரையும், காரை எலும்பும் சரிவர வளர்ச்சி பெறாத நிலைக்கு வழிவழியாக வரும் ஓர் ஓங்கி நிற்கும் ஜீனே காரணமாகும். இந்த ஆளின் இரண்டு தோள்களையும் முன்பக்கமாக ஒன்று சேர்த்து விடலாம் !

பிளவண்ணம்”, பிளவுதடு” என்ற குறைகள் சில சமயம் இணைந்தும் சில சமயம் தனித்தனியாகவும் காணப்பெறும். மரபு வழியாகவோ அல்லது சூழ்நிலையாலோ ஏற்படக்கூடிய பல்வேறு கூறுகள் இவற்றில் பங்கு பெறுகின்றன. மரபுவழியாக ஏற்படுங் கால், இவை பின்தங்கி நிற்கும் ஜீன்கள், பால்-இணைப்பு ஜீன்கள், ஒழுங்கற்ற ஓங்கி நிற்கும் ஜீன்கள் போன்ற பல்வேறு வகை ஜீன் களால் நேரிடுகின்றன. இங்ஙனம் நேரிடுவது பிறப்பதற்கு முன்னர் ஏற்படும் தீய விளைவுகளைப் பொறுத்தது.

பற்கள் : பெரும்பாலான பற்குறைகள் சூழ்நிலை காரணமாக ஏற்படினும், ஒரு சிலரிடம் இவை ஜீன்களாலேயே நேரிடுகின்றன. ஒரு சிலரிடம் வெட்டுப்பற்கள்” காணப்பெறுவதில்லை; அல்லது மேல் வெடடுப்பற்கள் மட்டிலும் காணப்பெறுகின்றன. வேறு சில ரிடம் பின்கடைவாய்ப் பற்கள்” இருப்பதில்லை. ஒரு சிலரிடம் மிகைப் பற்களும் காணப்பெறுகின்றன. பிறக்கும்பொழுதே சில குழவிகளிடம் பற்கள் உள்ளன. இன்னும் சிலரிடம் பற்களை

பிற்றசை முடிவிடுகின்றது. இவை யாவும் மரபுவழிக் கூறுகளே.

கணுக்கால் - Ankle. Iositsu6%rrth - Clest palate. t?srlG - Hare lip

Gsuto.Gelil Iphassir - Incisors.

9. பின்கடை வாய்ப்பற்கள் - Molars.