உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைபாடுள்ள உடலமைப்பு 187

கொத்துக் கொத்தாகச் சில இடங்களில் மயிர் இருந்து நாளடைவில் முற்றிலும் வழுக்கையாகும். சிலரிடம் முகத்தில் மட்டிலும் மயிர் அடர்ந்து காணப்பெறும். சிலரிடம் காலமல்லாக் காலத்தில் கரை தோன்றும்.

நகங்கள் : வழிவழியாக வரும் பல்வேறு நகக்குறைகளும் முறைகேடுகளும் உள்ளன. இவற்றுள் மிகக்கேடானவை மயிர் பற்றிய சில குறைகளுடன் சேர்ந்து காணப்பெறும்; சிலரிடம் முற்றிலும் நகமே காணப்பெறுவதில்லை; சிலரிடம் ஓரளவு காணப் பெறும். சிலரிடம் அதிகத் தடித்த நகங்களும், சில சமயம் இங்கிலை சிலரிடம் உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் தடித்ததோலுடன் சேர்ந்து காணப்பெறும். இன்னும் வளைந்த நகங்கள். தட்டையான நகங்கள், சிறிய நகங்கள், மெல்லிய நகங்கள், மிருதுவான நகங்கள் போன்ற நகவகைகளும் காணப்பெறுகின்றன. பிறக்கும்பொழுது காணப்பெறும் இவை யாவும் முற்றிலும் ஓங்கிகிற்கும் ஜீன்களாலோ, அல்லது சிறிதளவு ஓங்கிகிற்கும் ஜீன்களாலோ நேரிடுகின்றன.