பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் மனமுடையோர் 205

இந்த நோய் தானாகத் தோன்றுவதாலும், இதனை விளக்கக் கூடிய சூழ்நிலைக் கூறுகள் இல்லையாதலாலும், இஃது உடல் கிலை அடிபபடையில் மரபுவழிக் கூறுகளால் தோனறக் கூடுமோ எனற நம்பிக்கையைப் பலபபடுததுகின்றது. 1948இல் மேற் கொள்ளப்பெற்ற ஆய்வு ஒன்றில நெருக்கடியான சமயத்தில் இங் நோயாளர்களிடம் மாங்காய்ச சுரப்பிகள் தக்கவாறு துவங்கி அதிக மான வேதியியல் பொருள்களை விடுவிப்பதில்லை எனறு அறியப் பெற்றுள்ளது. இது நிலைநிறுத்தப்பெற்றால் இந் நோயாளர் களிடம் மன முறிவு உண்டாவது விளக்கம்பெறும். எனினும், முன்னதாகவே நிலவும் ஒரு சில தளர்ச்சிகளின (Weaknesses) காரணமாகவே இது உண்டாகின்றது என்று ஆய்வாளர்கள் கருது கின்றனர்.

குறிப்பிடத்தக்க பல முடிவுகளால் மரபுவழிபற்றிய சான்று கிடைக்கின்றது. ஒரு கரு இரட்டைக் குழவிகளில் ஒரு குழந்தை யிடம் இந் நோய் காணப்பெறின் மற்றொரு குழவியிடமும் இது தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும், இரு கரு இரட்டையர் களில் ஒருவரிடம் இந் நோய் காணப்பெறின் மற்றொருவரிடம் இது தோன்றுவதற்கு வாய்ப்புகள் இல்லையென்றும் சா ன் று க ள் உள்ளன. ஒரு குடும்பத்தில் ஒருவரிடம் இந் நோய் காணப் பெற்றால் அவருடன் நெருங்கிய குருதியுறவுள்ள மற்றவர்களிடம் இந் நோய் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.

இந் நோய் மரபுவழியாக இறங்குவது ஒழுங்கற்ற நிலையிலுள் ளது எனறும். இஃது ஒனறோடொன்று சேர்ந்து செயற்படும் பல்வேறு ஜீன்களால் உண்டாகின்றது என்றும், அ.தாவது பின் தங்கும் ஓர் இணை ஜீன்களும் ஒன்று அல்லது ஒனறற்கு மேற்பட்ட வழி கிலை ஜீன்களும் சேர்வதால் உண்டாகின்றது என்றும், இ.து இன்னும் இனங் கண்டறியபபெறாத சில சூழ்நிலைக் கூறுகளால் உண்டாகினறது என்றும இன்றைய அறிவியலறிஞர்கள் கருது கின்றனர்.

வீறுச் சோர்வு : இது பித்து நோயைவிடக் குறைவாகவே பரவி கிலவுகின்றது. இது பிதது நோயினின்றும் தாக்கும் காலம்