உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்த மனமுடையோர் 2 #3

முட்டாள்கள் ஆகிய யாவரும் ஒரே குழுவில் வைத்தே ஆராயப் பெற்றனர். அறிதிறன் எனபது ஒரே அலகாகச் செயற்படுகின்றது என்றும், ஒரு சில ‘உயிர்காடியாகவுளள’ ஜீன்களின வேறு பாடுகள்தாம் பல்வேறு நிலை மனபான்மையுடையோர் அமை வதற்குக் காரணமாகின்றது என்றும் தவறாகக் கொண்டமையே இதற்குக் காரணமாகும்.

எனவே, நாம் மனக் குறைவுடையவர்களை இரண்டு முக்கிய குழுக்களாகப் பிரித்துத் தெளிவான வேறுபாட்டைக் காண்பது இன்றி யமையாததாகின்றது. முட்டாள்களும் கனி பேதையரும் ஒரு குழுவிலும். பேதையர் மற்றொரு குழுவிலுமாக அமைகின்றனர். முதற் குழுவினுள்ளோரைக் காண்பது அரிது. தாழ்ந்த நிலை மனக் குறைவுடையோர்கள் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியிருக்கலாம எனக் கணக்கிட்டுள்ள னர். இரண்டாவது குழுவிலுள்ள பேதையர் மக்கள் தொகையில் 2 சதவிகிதம் அல்லது அதற்குச சிறிது அதிகமாகவே இருத்தல் கூடும். இந்த இரு குழுவினரிடையேயுள்ள முக்கியமான வேறு பாடுகள் யாவும் உடலியல்புகளையும் அவற்றை விளைவிக்கும் கூறுகளிலேயுமே உள்ளன. கிட்டத்தட்ட எல்லா முட்டாள்களும் கனி பேதையரும் உடற் குறையும் மனக் குறைவும் உடையவர்கள் : வழக்கமாக உள்ள அமைபபுமுறைபற்றியதும், சுரப்பிபற்றியதும் அல்லது நரம்புக் கோளாறுபற்றியதுமான இயல்பிகந்த நிலை யினால் அவருடைய மனநிலை பழுதடைந்து பல்வேறு வித ஏனைய விளைவுகளையும் உண்டாக்குகின்றன. இந்த இனத்தில் மங்கோலிய முட்டாள்கள், கூழையர் “, மண்டை சுருங்கியோர்’ குடும்ப முட்டாள்கள், மிகக் குறைந்த விகிதத்திலுள்ள மன வளர்ச்சி யில்லாத காக்கை வலிப்புடையோர் ஆகியோர் அடங்குவர்.

பேதையர் என்போர் மருத்துவமனை வேண்டிா மனக் குறை யுடையோர். இவர்களிடம் இயல்பிகந்த உடல் நிலை இல்லை :

1 O. Jn-soogpurif - Cretins. 11. மண்டை சுருங்கியோர் - Microcephalics. 12. காக்கை வலிப்புடையோர் - Epileptics, 13. மருத்துவமனை வேண்டா - Aclinical.