உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வாழையடி வாழை

மகிழும் உறவினர்கள் அதன் முகத் தோற்றத்தையும் உறுப்பு நலன் களையும் ஆராய்ந்து பார்த்து மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்ளு கின்றனரல்லவா?

‘பரந்தாமனை நீ அறிவாயல்லவா? மன்மதனைப் போன்ற அழகான தோற்றமுடையவன். அவனது மனைவிதான் குறைவா? அவளும் திருமகளைப் போன்ற வடிவமுடையவள். அவர்கட்குப் பிறந்துள்ள குழந்தைதான் திருஷ்டி பரிகாரத்திற்கு'ப் பிறந்தது போல் சுத்த அசடாக முளைத்திருக்கின்றது !'-இப்படியும் ஒரு “விமர்சனத்தை நாம் கேள்விப்படத்தான் செய்கின்றோம்.

‘கோடி வீட்டுக் குப்புசாமி வீட்டில் வேலைக்காரி ஒருத்தி இருக் கின்றாள். சுத்த அசடு. அழகோ எட்டேகால் இலட்சணம்’. அவளுடைய கணவனும் அப்படித்தான். பார்ப்பதற்கு விகாரமான உருவமுடையவன். குப்பை மேட்டில் இரத்தினம் கிடைத்த மாதிரி அவர்கட்கு ஒரு மகள் பிறந்திருக்கின்றாள். திருமகளே அவதாரம் செய்ததைப் போல் மூக்கும் முழியுமாக இருக்கின்றாள். வந்தால் அதிர்ஷ்டம் அப்படி வரவேண்டும்'-என்று ஒரு பெண்மணி பேசு கின்றாள். இத்தகைய பேச்சுகள் எத்தனையோ கம்முடைய காதில் விழத்தான் செய்கின்றன.

காங்கேயம் காளையின் கம்பீரத் தோற்றம் கண்ணுக்கு இனிதாக உள்ளது. தோள் கண்டார் தோளே கண்டார் !” என்பது போல நாம் அதன் திமிள், அதன் கொம்புகள், அதன் கம்பீரமான கடை இவற்றில் மனத்தைப் பறிகொடுக்கின்றோம். ஆனல் சுமார் நூறு ஆண்டுகட்கு முன்னர் அக் காளை இன்றிருப்பதுபோல அவ்வளவு அழகாக இருக்கவில்லை. அதன் கொம்புகளும் பிற உறுப்புகளும் இன்றிருப்பனபோல் அன்று அமைந்திருக்கவில்லை. இவையெல் லாம் வேறு இனச் சேர்க்கையால் ஏற்பட்ட விந்தையாகும்.

ஆந்திர மாநிலத்தில் பல அருமையான மாங்கனிகள் உள்ளன. “பங்கன பல்லி'யின் சுவையை அறியாதார் யார் ? அதனை உண்ட வர்கள் வானமிழ்தமும் இப்படி இருந்திருக்குமா ? என்றே கேட் பார்கள். தமிழ்நாட்டார் சேலம் ஒட்டு மாம்பழத்தின் சுவையை நன்கு அநுபவித்திருப்பார்கள். சென்னைப் பழக் கடைகளிலும்