பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 30

குருதி ஆராய்ச்சியின் பயன்கள்

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இளம்பெண் ஒருத்தி தனக்குப் பிறந்த குழந்தையின் தந்தை ஒரு குறிப்பிட்ட இளைஞனே என்று வாதாடினாள். பல்வேறு பட்ட குறுக்கு விசாரணை வினாக்களின மூலம் அந்த இளைஞன் ஒரு குறிப்பிட்ட நாள் இரவு அவள் வீட்டிற்குப் போனது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டான். ஆனால் தான் அவளிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று வற்புறுத்தினான். இதற்குமேல் அவனை வினாக்களால் அசைகக முடியவில்லை.

இந்தக் குறிப்பிட்ட வழக்கின் முடிவபற்றி நாம் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இத்தகைய வழக்குகளில் குருதிச் சோதனைகள் பெரிதும் பயன்படுகின்றன. இந்தச் சோதனைகளால் ‘இன்னமனிதர்தாம் இன்ன குழந்தையின் தந்தை’ என்று அறுதியிட்டுக் கூற முடியாதெனினும், தக்க சான்றுகளால் அவர் அக் குழந்தையின் தந்தை அன்று என்று அறுதியிட முடிகின்றது. ஆகவே, இச் சோதனைகள் முதல்நிலையில் “விலக்கற் சோதனைகளாகப் பயன்படுகின்றன. அஃதாவது, அவருடைய குருதி ஒரு குறிப்பிட்ட வகைக் குருதியாக இல்லாததால், அஃது அவருடைய குழந்தையாக இருத்தல் முடியாது என்ற முடிவினால் அவர் தந்தையன்று என்று விலக்கப்பெறுகின்றார். 1935 இல் இச் சோதனைகள் அமெரிக்காவில் சட்டப்படி செல்லத்தக்கவை என்ற அங்கீகாரம் பெற்றபொழுது, இத் தந்தைவழியறியும் சோதனைகள் A, B, AB, O என்ற குருதிவகைகளின் அடிப்படை

1. விலக்கற் சோதனைகள் - Exclusion lests,