உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 வாழையடி வாழை

பொருள்களில் தனித்தனியாக ஒன்றோ, அல்லது இரண்டும் சேர்ந்தோ எல்லா மக்களின் குருதியிலும் காணப்பெறுபவை. இந்த இரண்டு பொருள்களும் இரண்டு ஓங்கி நிற்கும் ஜீன்களால் உண்டா கின்றன. ஒருவர் தாய்வழி ஒன்றும், தந்தைவழி ஒன்றுமாக இரண்டு M ஜீன்களைப் பெற்றால், அவர் M குருதியை உடையவராக இருப்பார்: அவரிடம் இரண்டு N ஜீன்கள் அமையின் அவருடைய குருதி N ஆக இருக்கும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து வெவ் வேறு ஜீனைப் பெறின், அவருடைய குருதி MN குருதியாக முடி யும். எனவே, ஒரு குழந்தையிடம் M குருதியிருப்பின N மனிதர் அதனுடைய தந்தையாக இருத்தல் முடியாது. அல்லது குழந்தை யின் குருதி N ஆக இருந்தால் அவனுடைய தந்தை M மனித ராக இருத்தல் முடியாது. இங்ஙனமே, குழந்தையிடம் MN குருதி யிலிருந்து இவற்றில் ஒன்றும் தாயினிடம் இல்லா திருந்தால் அது தந்தையிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

(2) இன்னொரு உண்மையான வழக்கினைக் காண்போம்

மணமான கங்கையொருத்தி யாரும் வியப்படையக்கூடிய வழக் கொன்றினை நீதிமன்றத்தில் தொடுத்தாள். தன்னுடைய குழந்தை யின் தந்தை தன்னுடைய கணவன் அன்று என்றும். உண்மையில் அக் குழந்தையின் தங்தை தனது காதலனே என்றும் அவள் வாதித் தாள். இங்கு அவளுடைய கணவரே வாதியாக இருந்து வழக்காடி னார். முதன்மையான குருதி வகைக் குழுவின் சோதனைகளால் அது மெய்ப்பிக்கப்பெற முடியவில்லை. ஆனால் M , N சோதனை கள் அவளுடைய கணவர் குழந்தையின் தந்தையாக இருத்தல் முடியாது என்று மெய்ப்பித்தன.

(3) மேற்கூறிய வழக்கிற்கு நேர் விரோதமாக மற்றொரு வழக்கு நடைபெற்றது. இஃது எங்கும் நன்கு விளம்பரமான தந்தை வழியைப்பற்றிய நீதிமன்ற நடவடிக்கையாகும். எங்கும் புகழ் பெற்ற ஒரு சினிமா நடிகர்மீது தொடுக்கப்பெற்ற இந்த வழக்கில் M. N. சோதனைகள் ஒன்றையும் மெய்ப்பிக்கவில்லை ஆயினும் வழக்கின் முடிவு நடிகருக்குப் பாதகமாக ஏற்பட்டுவிட்டது. இந்த வழக்கு 1945இல் கலிஃபோர்னியா நீதிமன்றம் ஒன்றில் கடை பெற்றது. அங்குக் குருதிச் சோதனைகள் சான்றுகளாக ஏற்றுக்