பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதி ஆராய்ச்சியின் பயன்கள் 251

கொண்டாடினர். குருதிச் சோதனைகள் மேற்கொள்ளப்பெற்றன. அவை வியத்தகு முடிவுகளைக் காட்டின. அந்த இரட்டைக் குழவி களின் ஒன்றிற்கு ஒருவர்தாம் தந்தையாக இருத்தல் வேண்டும் என்றும், இரண்டாவது குழந்தைக்கு மற்றவர் ஒருவேளை தந்தையாக இருத்தல்கூடும் என்றும் அவை மெய்ப்பித்தன! சாதாரணமாகக் கீழ் கிலைப் பிராணிகளிடம் கிகழும் இத்தகைய இரட்டைச் சூல்கள் சில சமயம் மானிட இனத்திலும் நிகழ்தல் உண்டு. (இது பெரும்பாலும் தீய நடததையுடைய மகளிரிடையேதான் நிகழும்).

குருதிச் சோதனைகள் குற்றவாளிகளைக் கண்டறிவதில் பயன் படுகின்றன. விரல் ரேகையைப்போல் இரத்தக் கறையும் ஊர்க் காவலர் பதிவேடுகளில் முக்கிய இடத்தைப் பெறும் நாள் மிக அண்மையில்தான் உள்ளது. மேலும், உயில்’ வழக்கில் சரியான வாரிசை உறுதிப்படுவதற்கும் இச் சோதனைகள் பயன்படுகின்றன. இறந்துபோனவரின் குருதிவகைகளைக் கொண்ட பதிவேடுகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைக்கொண்டு தவறான வாரிசுகளை மெய்ப்பித்து உண்மையான வாரிசுகளைக் கண்டறிந்து விடலாம்.

மேற்கூறிய சோதனைகளில் ஒரு சில குறைகளிருப்பினும் எதிர்காலத்தில் குருதியைப்பற்றியனவும் ஜீன்களைப்பற்றியனவு மான மேலும் சில கண்டுபிடிபபுகளினால் இச் சோதனைகள் திட்ட மாக அமைந்துவிடும், ஒரு குறிப்பிட்ட சுழல் துப்பாக்கியினின்றும் ஒரு குறிப்பிட்ட குண்டு சுடப்பட்டது என்றும், ஒரு குறிப்பிட்ட கடிதம் ஒரு குறிப்பிட்ட தட்டச்சுப் பொறியில்தான் அச்சிடப் பெற்றது என்றும், நானூறு ஆண்டுகட்கு முன்னர் இறந்த ஒரு வருடைய துரிகையால்தான் ஒரு வண்ண ஒவியம் தீட்டப்பட்டது என்றும் அறுதியிட்டுக் கூறவல்ல வல்லுநர்கள் கிறைந்தது இக் காலம். அங்ஙனமே, ஒரு குழந்தையும் இன்ன பெற்றோர்கட்குத் தான் பிறந்தது என்று அறுதியிட்டுக் கூறும் நாள் மிகத் தொலைவில் இல்லை

4. உயில்--Will