உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நெடுநாள் வாழ்வு 25.3

இன்றும் நூற்றாண்டுகட்குமேல் வாழ்ந்த ஒரு சிலரைப்பற்றிக் கேள்வியுறுகின்றோம். நூறு வயதிற்குமேல் வாழ்ந்ததாகக் கூறும் ஒரு சிலரும் பிறந்த தேதிபற்றிய சான்றிதழ்கள் இன்மையால் தங்கள் வயதை வேண்டுமென்றே அதிகமாகச் சொல்லுவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஓர் இலடசத்திற்கு மூன்று அல்லது நால்வர் வீதம் 100 வயது வாழ் கின்றவர் இருக்கலாம் என்றும், அவர்களுள் ஒரு சிலரே நூறு வயதிற்குமேல் வாழலாம் என்றும் கணக்கிட்டுள்ளனர். அ .ெ ம. ரி க் கா வி ல் மிஸஸ் கே. லூயி தியர்ஸ் என்ற

அம்மையார் 1 11 ஆண்டுகள் 138 நாட்கள் வாழ்ந்து 1926இல் இறந்தார் என்றும், அயர்லாந்தில் திருமணமாகாத காத்தரின் பிளங்கெட் என்ற அம்மையார் 1 11 ஆண்டுகள் 329 நாள்கள்

வாழ்ந்து 1932இல் இறந்தார் என்றும் நூல்களில் குறிப்பிடப் பெற்றுள்ளன. நமது நாட்டிலும் மைசூர் மாநிலததைச் சார்ந்த கே. விஸ்வேஸ்வரய்யா என்ற பொறியியல் வல்லுநர் நூறு ஆண்டு கட்குமேல் வாழ்ந்து அண்மையில் மறைந்ததை நாம் நன்கு அறி வோம். இவற்றையெல்லாம் மனத்திற்கொண்டு மனிதர்களின் வாழ்நாள் 1 15 ஆண்டு வரை உச்சநிலைககு உயாலாம் என்று நாம் கருதலாம். இன்று மனிதர்களின் சராசரி ஆயுள் 68 ஆண்டுகள் என்று கூறுகின்றனர். எனினும், ஒருசில குடும்பங்களில் உள் ளோர் சராசரியில் தலைமுறை தலைமுறையாக இந்த ஆண்டிற்கு மேல் பல்லாண்டுகள் வாழ்கின்றனர் என்றும் ஏனைய குடும்பங்களி லுள்ளோர் சராசரியில் பல்லாண்டுகள் குறைவாக வாழ்கின்றனர் என்றும் நாம் அறிகின்றோம். இவற்றிலிருந்து மனிதர்களுடைய வாழ்நாள் பெரும்பாலும் குடிவழிக் கூறுகளைப் பொறுத்தது என்று நம்பத் தோன்றுகின்றது. இக் கூறுகள் மனிதர்களுடைய குறிப் பிட்ட உள்ஸ்ரீப்புகளிலும் இழையங்களிலும் செயற்பட்டோ அன்று உடல் முழுவதும் செயற்பட்டோ ஒருவரது ஆயுட்கால எல்லையை வரையறுக்கின்றன.

தானியங்கிகளைப் போலவே ஒவ்வொரு மானிட உயிரியும்

எத்தனை ஆண்டுகள் இவ்வுலகில் வாழலாம் என்பதுபற்றிய உத்தரவாதத்துடன் வாழ்வினைத் தொடங்குகின்றது. இதனை