உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழையடி வாழை 5

மேற்கூறியவாறு மக்களிடம் மரபு வழியாகச் சில பண்புகள் பல்வேறு கோலங்களில் இறங்கி வருவதற்குக் காரணம் என்ன ? இவ்வாறு இறங்கிவரும் சில பண்புகளைச் சூழ்நிலையால் மாற்றி யமைக்க முடியுமா ? எந்த அளவிற்கு மாற்றியமைக்க முடியும் ?

இயற்கை அமைப்பில் இனமாற்றம் நிகழ்வதில்லை. மக்கள் இனத்தில் மக்களே தோன்றுகின்றனர். பறவை இனங்கள், விலங்கு இனங்கள், பூச்சி இனங்கள் இவற்றில் அந்தந்த இனங்களே தோன்று கின்றன. இங்ஙனம் உயிரிகளின் வகை மாறாமல் வாழையடி வாழையாக இருந்து வருவதற்குக் காரணம் என்ன ? அந்த நியதி யில் அடங்கிக் கிடக்கும் இரகசியம் என்ன ?

வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம்

மரபினில்யான் ஒருவ னன்றாே ?”

என்று இராமலிங்க வள்ளல் பாடியுள்ளார் அல்லவா ? அவர் குறிப் பிடும் மரபு’ என்பதற்குப் பொருள் என்ன ? அதனை மரபு வழி’ என்று குறிப்பிடலாமா ?

இங்ஙனம் மரபுவழி முறையில் இயற்கை அன்னை புரிந்துவரும் அருஞ்செயல்கள் - அற்புதச் செயல்கள் - கோடானு கோடி. படைப் பின் விந்தையை ஏதோ ஓரளவு அறிவியலறிஞர்கள் அறிந்து கொண்டுதான் வருகின்றனர். ஆனால் கற்றது கைமண் அளவு : கல்லாதது உல களவு உள்ளது. இங்ஙனம் வாழையடி வாழையாக வரும் இயற்கையன்னையின் திருவிளையாடல்களின் ஒரு சில இரகசியங்களை ஒரளவு அறிந்துகொள்ள முயல்வோம்.

8. திருவருட்பா - ஆறாந்திருமுறை - பிரியேனென்றல் - செய். 4.

4. toru Sugs - Heredity,