உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 வாழையடி வாழை

அதன் காரணமாக நல்ல வாழ்க்கை வசதிகளைப் பெற்றுச் சற்றுச் சராசரி உயர்ந்த வாழ்நாள் எல்லையை எய்தவும்கூடும்.

இந்த நிலையில் வேறுசிலவற்றையும் கவனிப்போம் :

உடல் அமைப்பு: கல்ல உடலமைப்பு வாழ்நாளைக் கூட்டு கின்றது. இதனால் உடற்பொறி நுட்பம் நன்கு செயற்படுகின்றது. தேவைக்குமேல் உடல் எடையினைக் கொண்டவர்களில் பெரும் பகுதியினர் விரைவில் மரித்துப் போகின்றனர்.

வேகமான வாழ்க்கை, அளவுமீறிய உழைப்பு: இவையும் வாழ் நாளைக் குறைக்கின்றன. யாதொரு கவலையும் இன்றி மன அமைதியுடன் வாழ்கின்றவர்களின் ஆயுட்காலம் நீண்டிருப்பதைக் காணலாம். யாண்டு பலவாக கரையிலவாகுதல்’ எனற புறப் பாட்டுச் செய்தி ஈண்டு நோக்கி அறியத்தக்கது.

குருதியமுக்கம், நாடித்துடிபபு: இவையும் நாம் வாழ்நாள் எல்லையினை ஓரளவு அறுதியிடுகின்றன.

திருமண வாழ்க்கை : திருமண வாழ்க்கை நடத்துபவர்கள் மணமாகாதவர்களைவிடச் சற்று அதிகாட்கள் வாழ்வதாகத் தோன்றுகின்றது. மண வாழ்க்கையிலுள்ளோருக்கு வாழ்க்கை வசதிகளும். நல்ல கவனிப்பும் இருப்பதே இதற்குக் காரணம் என்று கருதலாம்.

குடி : குடி வாழ்நாளைக் குறைக்கின்றது என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. அளவோடு குடிப்பவர்களை இது பாதிப்ப தில்லை என்ற கருத்து அனைவரும் ஒப்புக்கொள்ளத்தகக நிலையில் உள்ளது. எனினும், ஒழுக்கநூலார் இதனைக் கடிகின்றனர்.

புகை பிடித்தல்: இதுவும் அளவுமீறினால் தீங்கு பயக்கின்றது. நுரையீரல் புற்றுநோயினையும் விளைவிப்பதாகக் கண்டறிந் துள்ளனர்.

மேற்கூறியவற்றையெல்லாம் ஒருங்கே வைத்து ஆராய்ந்தால் கம்முடைய வாழ்நாள் எல்லை அடியிற்கண்டவற்றைப் பொறுத் துள்ளது :

1. புறம்-191.