உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வழி இயலில் புரட்சி 269

விலங்கியலும் தாவர இயலும் இராம இலக்குவனர் போல இணைக் துள்ள ஓர் அறிவியல் துறை-'ஜீன்’ என்ற ஓர் அற்புத நுண்ணிய உயிரணு புரியும் திருவிளையாடல்களையும் சொல்லி முடியா , எழுதியும் முடியா. இது வேளாண்மை, மருததுவம், தாவர இயல், விலங்கியல் போன்ற துறைகளில் புரியும் திருவிளையாடல்கள் மனித நலத்திற்கே உரியவையாகத் திகழ்கினறன இதில் கற்றது கை மண்ணளவு ; கல்லாதது உலகளவாக’ உள்ளது. இச் சிறிய நூலில் கை மண்ணிலும் மிகச் சிறிய ஒரு பகுதி மட்டிலும் விளக்கப பெற்றது. படிப்போரிடம் இத் துறைபற்றிய ஓர் ஆர்வத்தை எழுப்பக் கூடியதாக அமைந்தால் அதுவே இந் நூல் பெற்ற பெரும் பேறு. ஆனால், நம் நாட்டுப் படிப்போர் இளைஞர்களும் முதியோர் களும் உட்பட, கதைகளிலும் புனைகதைகளிலும் காட்டும் ஆர்வத்தை அறிவியல் நூல்களில் காட்டாதிருத்தல் நம் நாட்டு அவப் பேறாகும்.

இந்தியத்தாயின் ஆசியால் 1983 ஆம் ஆண்டு திசம்பர்த திங்களில் காட்டின் தலைநகரில் கால்வழி இயல்பற்றிய ஓர் அனைத் gays tom sm () (Fifteenth International Congress cf Genetics) பதது நாட்கள் நடைபெற்றது. ஐம்பது நாடுகளிலிருந்து சுமார் 2500 கால்வழி இயல் அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு தாம் கண்ட உண்மைகளையும் இனி தாம் காணவேண்டிய உண்மை களையும்பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்; கலந்து ஆராய்ந்தனர். முன்னேற்றமடைந்த நாடுகளில் ஆய்ந்து கண்ட கால்வழி இயல் உண்மைகளை முன்னேறிவரும் நாடுகளின் கன்மை கட்கு எங்ஙனம் பயன்படுத்தலாம் என்று கலந்து பேசினர். இந்த மாநாட்டில் நோபெல் பரிசுபெற்ற மூன்று கால்வழி இயல் அறிஞர் களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும். மாநாட்டில் உலக அறிஞர்களின் கவனத்திற்கு வந்த ஒருசில உண்மைகளை ஈண்டுக் குறிப்பிடுவோம்.

புற்றுநோய் விளைவிக்கும் ஜீன் : ஒருசில அறிஞர்கள் ஆராய்ச் சிக்கு வசதியும் வாய்ப்பும் சுதந்திரமும் வேண்டும் என்று குறிப் பிட்டனர். இந்தியாவில் பிறந்து கனடாவில் (ஒட்டவா) அறிவியல் ஆய்வுப்பணியிலுள்ள டாக்டர் சரண் ஏ. காரங்க் என்பார் துள்ளிக்