உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 வாழையடி வாழை

லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற மருத்துவ மனையில் இவர்களிடம் கருத் தரிப்புச் செய்து வெற்றிகரமாகக் கருவுயிர்த்தலையும் நிகழ்த்தி யுள்ளனர். அந்த மருததுவ மனையில் பணியாற்றும் மருத்துவர்கள்.

இந்த இரு பெண்களின் கணவன்மார்களின் விந்தணுக்கள் வேறு இரு பெண்களின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தப்பெற்றது. இதனால் அந்தப் பெண்கள் கருவுற்றனர்: பின்னர் அந்தப் பெண்களின் கருபபையில் வளர்ந்துவந்த கருக்கள் வெளியே எடுக்கப்பெற்று இந்த மலட்டுப் பெண்களின் கருப்பைக்குள் பொருத்தப்பெற்றன. இந்தப் பெண்களின் வயிற்றில் கருக்கள் வளர்ந்துவந்தன: உரிய காலத்தில் அவர்கள் மகப்பேறும் அடைந்தனர்.”

இந்த உத்தியில் வெற்றி கண்ட அறிவியல் அறிஞர்கள் மேதைகளின் விந்தணுக்களைச் சேகரித்துச் சேமகிதியாகப் பாதுகாக்க லாம் என்ற வழியைச சிந்திக்கின்றனர். தலை நகரில் நடைபெற்ற கால்வழி இயல் அறிஞர்களின் மாநாட்டில் மேதைகளின் விந்தணுக் களையும் முட்டையணுக்களையும் வருபயன் நோக்கிச் சேமிதது வைப்பதுபற்றியும் குறிப்பிட்டனர். ம க ப் பேறு அற்றவர்கட்கு மகப்பேறு அளிக்க இம்முறை துணை செய்வதோடு உயர்ந்த மரபைப் பாதுகாக்கும் பெருமையும் உண்டு என்பதையும் தெரிவித் தனர், ஆனால் இம்முறை “ஒழுக்க, சமூக, அரசியல் நெறி முறைகள் இவற்றினின்றும்’ விலக்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்பட வழியுண்டு என்பதையும் இவர்கள் குறிப்பிடாமல இல்லை.

1. பலராமன் பிறப்பு : கம்சனுக்குப் பயந்து ஏழாவது முறை தேவகி கருவுற்றபோது அந்தக் கருவில் வளர்ந்து பிறக்கும் குழவி யைக் கம்சனிடமிருந்து தப்புவிக்க வேண்டும் என்பது எம்பெருமான் திருவுள்ளம். ஆகவே, அக்கரு வசுதேவனின் மற்றொரு மனைவி யாகிய ரோகிணியின் கருப்பைக்கு மாற்றப்பட்டுப் பலராமனாகப் பிறந்தது; இவனே கண்ணனுக்கு மூத்த பலராமன்; சங்க இலக்கி யங்களில் நம்பி மூத்தபிரான்’ என்று குறிப்பிடப்பெறுபவன், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு (புதியது புனையும் ஆற்றல்) புராணத்தில் கதை போல் அடங்கிக் கிடக்கின்றது.