உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுவழி இறங்காப் பண்புகள் 29:

தணுக்களாகவும் மாறுகின்றன என்பதையும் விளக்கினோம். ஒரு வருடைய வாழ்நாளில் இந்த உயிரணுக்கள் இவ்வாறு முதிர்ச்சி யடைவதைத் தவிர யாதொரு மாற்றத்தையும் அடைவதில்லை. எனவே, ஒவ்வொரு கருவணுவையும்,” கருவுற்ற முட்டை” வழியாக கேர் முறையில் தொடர்ந்து வாழையடி வாழையாக வரும் கருஅணுக்களிலிருந்தே பெற்றதாகக் கருதலாம். அஃது ஒருவரின் உடலணுக்களினின்றும் உண்டானது என்று கருதுதல் தவறு. ஆகவே கரு-அணுக்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இறங்கி வருகினறன என்பது கினைவிலிருத்த வேண்டிய தொன்று. மேலும், நம்முடைய உடலணுக்களினுள்ளே நடைபெறும் எந்தவிதமான மாற்றமும் கரு-அணுககளிலுள்ள கிறக் கோல்களை எந்தவிதத்திலும் பாதிபபதில்லை என்ற உண்மையே பல நம்பிக்கை களை மாற்றிவிட்டது. அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட ஆயிரக கான சோதனைகள் இதனை நன்கு உறுதி செய்கின்றன.

நாம் ஒரு தலைமுறையில் நம்மை மேம்பாடு அடையச் செய்யும ஏற்பாடுகள் யாவற்றையும் நம்முடைய கரு-அணு மூலம் அடுதத தலைமுறைக்குக் கடத்தலாம் எனறு கொண்டுளள கம்பிக்கையை விட்டொழிககத்தான் வேண்டும். இவை யாவும் நம்முடன் மறைந்து மண்ணோடு மண்ணாகப் போகின்றன. அங்ஙனமே நம்மிடம் உண்டான குறைபாடுகள் யாவும். கமககுக் கேடு பயக்கக் கூடியவாறு செய்து வந்தவைகள் யாவும். அடுத்த தலைமுறைக்கு இறங்க முடியாது. போகினறன. எனவே,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.’ என்ற குறளின் கருத்து பிறப்பியல் உண்மைப்படி பொருந்தாத கூற்றாகினறது. வள்ளுவர் கூற்றினைப் பொய்யென்று அவ்வளவு எளிதாகக் கூறிவிடவும் முடியாது. அறிவு மரபு வழியாக இறங்கும் என்று ஒப்புக்கொள்ளாமல் சூழ்நிலையால் - அடுத்த தலைமுறைக்கு

8. கரு அணு இனச் செல் - Germ cell. 4. &sQosjjp gpli 6 pu- — Zygote (fertilized ovum). 5. குறள்-898.