உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறான கம்பிக்கைகள் 37

அதற்கு நேரிடலாம். லியனார்டோ என்ற புகழ்பெற்ற இத்தாலிய வண்ண ஒவியரும், அலெக்ஸாண்டர் ஹமில்ட்டன் என்ற அமெரிக்க அரசியலறிஞரும், ஹிட்லர் என்ற ஜெர்மானிய சர்வாதிகாரியும் ‘சட்டப் படிப் பிறக்காதவர்கள்தாமே. அவர்களது வாழ்க்கை எங்ஙனம் இருந்தது என்பதை நாம் அறிவோம். பாரதத்தில் வரும் கண்ணன் வாழ்க்கையிலும் இதே உண்மையைத்தான் நாம் காண் கின்றோம். எனவே, இயற்கையன்னை திருமணச் சான்றிதழை என்றுமே பொருடபடுத்துவதில்லை என்பது அறியக் கிடக்கின்றது.

முறைப்படி பிறக்காத குழந்தையின் சூழ்நிலை மாறுபடும் பொழுதுதான் அதன் தன்மையும் முறைப்படி பிறந்த குழந்தையின் தன்மையினின்றும் மாறுபடுகின்றது. முறைப்படி பிற க் காத குழந்தையின்மீது சமூகம் கருணை காட்டாததால், அது நல்ல சூழ் நிலையில் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாது போய்விடுகின்றது : வாழ்க்கை முழுவதும் அதற்குப் பல இடர்ப்பாடுகள் இருந்து கொண்டே உள்ளன. சில சமயம் இந்த இடர்ப்பாடுகள் விநோதமான திசைகளிலும் நேரிடுகின்றன. ஆனால் திருமணம் ஆகாது தாய்மையை அடையும் பெண்ணின்மீது சமூகம் கருணை காட்டியும் அப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் எல்லா வாய்ப்புகளைக் கொடுத்தும் உதவினால், தகாதமுறைப் பிறப்பு’ என்ற கூறு தன் செல்வாக்கை இழந்துவிடுகின்றது. இதனை ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகளினால் அறியலாம்.

பெற்றோர்களின் வயதும் குழந்தையின் இயல்பைப் பாதிக் கின்றது என்றும் சிலர் நம்புகின்றனர். எடுத்துக்காட்டாக, தாய் நாற்பத்தைந்து வயதும் தந்தை அறுபது வயதும் உள்ளபொழுது பிறக்கும் குழநதை மென்மையாகவும் அடிக்கடி நோய்வாய்ப்படும் கிலையிலும் உள்ளது. இவ்வாறு இருப்பதற்குக் காரணம்: பெற்றோர்களின் பாலணுக்களின் தளர்ச்சியினால் அன்று; ஆனால் அது வயதுமுதிர்ந்த தாயின் கருப்பையில் தக்க சூழ்நிலை இல்லா மையாலும், அத்தகைய நாட்பட்டபேறுகள் தேவையில்லாத பொழுதும், குழந்தைப்பேற்றிற்குரிய நிலைகள் சரியாக இல்லாத பொழுதும் ஏற்படுவதாலுமே உண்டாகின்றது என்று சொல்லலாம். குழந்தை பிறந்த பிறகு வேறு சில கூறுகளும் பங்குபெறுகின்றன.