உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவறான நம்பிக்கைகள் 43

தோன்றாமல் போயினும் போகலாம். அப்படித் தோன்றினும் அச சந்ததிகள் மலடாகவே இருக்கும் (எ-டு. கழுதை X குதிரை) என்பது அறியததக்கது.

பூசுரர்ப் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற புத்திர ராயினோர் பூசுரர் அல்லரோ? பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல் மாந்தரிற் பேதமாம் வடிவெவர் கண்டுளார்? வாழ்நாள் உறுப்பு:மெய் வண்ணமோ டறிவினில் வேற்றுமை யாவதும் வெளிப்பட லின்றே”

என்ற கபிலரகவற் பகுதி இக் கருத்தினை வற்புறுத்தல் காண்க.

மேற்குறிப்பிட்ட செய்திகளைக்கொண்டு வேறுபட்ட வகையைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் இணைவதால் அவர்கட்குப் பிறக்கும் குழவிகளிடையே ஏற்படும் உடலமைப்பிலும் முகத்தோற்றத்திலும் கேடு பயக்கும் பொருந்தா நிலை ஏற்படும் என்ற கொள்கை பிறந்துள்ளது. இதற்குத் தக்க சான்றுகள் இன்னும் காட்டப்பெற வில்லை. ஆகவே, தக்க சான்றுகள் கிடைக்கும்வரை இதனைக் கொள்கை’ என்று கொள்வதைவிட நம்பிக்கை’ என்றே கொள்வது பொருத்தமாகும்.

8. ஷை அடிகள் (78-88.)