பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறக்கோல்களும் ஜீன்களும் 5

அறிஞர்களும் நுண்பெருக்கித் தவறிய நிலையில் உய்த்துணர்ந்த ஊகங்களை வெளியிட்டுள்ளனர். ஜீன்களின செயல்களிலிருந்து இந்த ஊகங்கள் எழுநதவை. இவற்றை நம்பும் அளவுக்கு நமமை நாம் பழககப்படுததிககொள்ள வேண்டும். இன்று அறிவியலறி ஞர்கள் கவனம் முழுவதையும் கவர்ந்த அணுபற்றிய பல நுண்ணிய செய்திகளையும் படிதது உணரும் நமக்கு இப் பழக்கம் எளிதில் கைவரககூடியதே.

கி. பி. 2144இல் அக்டோபர் 26ஆம் நாள் பகல் 12 மணி 24 கிமிடம் 12 வினாடிக்கு முழு சூரியக்கிரணம் வருகின்றது என்று வானியல் அறிஞர் முன்னதாகக் கூறுவதை நாம் நம்புகினறோம். இவ்வாறு நமபுவதற்குக் காரணம். அத்தகைய முற்-கூற்றுகள் அடிக்கடி உண்மையாகவே நடைபெறுவதேயாகும். அங்ஙனமே ‘ஜீனைப்'பற்றிக கால்வழியியல் அறிஞ1 முனனதாகக் கூறும் சில செய்திகளை நம்புவதற்கு நம்மை நாம் பழககிக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜீன் ஒரு திட்டப்படுத்திய சூழ்நிலையில் குறிப் பிட்ட பொருள்களை உண்டாக்கிக் குறிப்பிட்ட விளைவு களைக் காடடும் என்று அவர் கூ று வ தி ல் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கையும் ஐயமும் அறிவு வளர்ச்சியின் இரு மூல வேர்கள். ஆயினும், வானியலறிஞரைப் போலன்றிக் கால்வழியியலறிஞர் தம் கூற்றுகளில் சற்று அடக்க மாகவே இருத்தல் வேண்டும். ஏனெனில் வானியலை நோக்கக் காலவழியியல்’ ஒரு சிறு குழந்தையே. தவிர, ஜீன்களும் உயிருள்ள பொருள்கள்: அவற்றின் செயலும் பல்வேறு எண்ணற்ற கூறுகளால் மிகச் சிக்கலாகும் தன்மையுடையது. எனினும், பல இடர்ப்பாடுக ளிடையேயும் கால்வழியியல் அறிஞர்கள் ஜீன்களைபபற்றியும் அவை செயற்படும் முறைகளைபபற்றியும் அவற்றின் விளைவு களைப்பற்றியும் பல உண்மைகளை நிலைநாடடியுள்ளனர். இவற்றை நாம் அறிய அறிய நம்முடைய பிறப்பின் இரகசியம்நுட்பம்-தெளிவாகின்றது. அவை நம்மை வியப்புக் கடலிலும் திளைக்கச் செய்கின்றன.

14. கால்வழியியலறிஞர்-Geneticist. 15. 3rdlpujui-Genetics,