பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வாழையடி வாழை

முறையில் இணைந்து பரிமாறிக்கொண்டால் வரம்பின்றி எண்ணற்ற சேர்க்கைகள் உண்டாகின்றன என்பதை ஊகிக்கலாமல்லவா ? அன்றியும். ஜீன்களும் சடுதி மாற்றத்தால் புதிய வகை ஜீன்களாக மாறித தோனறவும் ஏதுவுண்டு. இதனால் மரபுவழிப் பண்புகள் புதிய வகையாக மாறுகின்றன. இவ்வாறு ஜீன்கள் இணைந்து பரிமாறிக் கொள்வதாலும் சடுதி மாற்றத்தாலும் நம்மைப்போன்ற மற்றொருவர் எத்தனை தடவைக் கொருமுறை பிறக்கலாம் என்பதை ஊகிததால் கிட்டததட்ட அங்ஙனம் பிறப்பகே அரிது என்று கூறிவிடலாம். நம்மைப்போலவே அனைததிலும் ஒன றுபோல் மற்றொருவரை இவ்வுலகில் காணவேமுடியாது என்று உறுதியாக அறுதியிடலாம்.

படம்-18. ஒத்த நிறக் கோல்கள் தழுவிப் பிரிதலை விளக்குவது. (உருண்டை மணிகள் போலிருக்கும் ஜீன்கள் காட்டப் பெறவில்லை)

நம்மைப்போன்றே மற்றொருவர் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? அதைப்பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் ஒரு குறிபபிட்ட விந்தணு, ஒரு குறிபபிட்ட முட்டை யணுவுடன் ஒரு குறிப்பிட்ட நேரததில் சேர்ந்துதான ஓர் தொல் காபபியன், ஒரு வள்ளுவன், ஒரு கம்பன், ஒரு இராமகிருஷ்ண பரம ஹம்ஸர், ஓர் இராமலிங்க அடிகள். ஒரு காநதியடிகளைத் தோற்று வித்திருக்க வேண்டும் என்பதை எண்ணும்போதுதான் ஆண்டவன் படைப்பின அற்புதம் தெளிவாகின்றது. நம்மையே நாம் மறந்து அவன் திருக்கூத்தினில் ஈடுபட்டுக் களிக்கின்றோம். பக்திப்

2. F(9&lorfpth - Mutation.