பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 10

பிறப்பதற்குமுன் நேரிடும் பேரிடர்கள்

கருவுற்ற முட்டை தாயின் கருப்பையில் குழந்தையாக உருப் பெற்று இவ்வுலகை அடைவதற்குமுன் எத்தனையோ பேரிடர்கள் அதற்கு நேரிடலாம். இத்துறையில் ஆராய்ந்த அறிவியல் அறிஞர்கள் குழந்தை தாயின் கருப்பையிலிருக்கும்பொழுது அதற்கு .ே க ரிட க் கூ டி ய பல பேரிடர்களைப்பற்றி விளக்கியுள்ளனர். அவற்றைப்பற்றிய ஒருசில குறிப்புகளை ஈண்டுக் காண்போம்.

கருவுற்ற முட்டையில் உயிரணுப் பிரிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுதே அது கருக்குழலின் வழியாகத் தாயின் கருப்பையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கும். அது கருப் பைக்குள் வருங்கால் ஒரு குண்டூசியின் தலை அளவு இருக்கும். அது சில நாட்கள் வரை கருப்பையில் புதைந்துகொள்ளாமல் அகதி போல்’ அங்குமிங்குமாக ஊசலாடி மிதந்துகொண்டிருக்கும். கருப்பையில் புதைந்துகொள்ளும்வரை அதனிடமுள்ள மஞ்சட்கருப் பொருள் அஃது உயிர் வாழ்வதற்குப் போதுமானது. அது கருப்பையை நோக்கி வந்துகொண்டிருககும்பொழுதே அதனிடம் சில தளிர்க் கைகள் வளர்கின்றன. இந் நிலையினுள்ள கருவுற்ற முட்டை படத்தில் (படம்-19) காட்டப்பெற்றுள்ளது; இங்கிலையில் அஃது ஒரு நெருஞ்சிமுள் அல்லது ஒருசிறு ஊமத்தங்காய் வடிவிலிருப்ப தைக் காண்க. தன்னுடைய தளிர்க்கைகளின் துணையால் அது கருப்பையின் சுவர்களில பதிந்துகொள்கின்றது, கருப்பையில் புதைந்துகொள்வதற்குமுன் அது கருப்பையை நோக்கி வந்து

1. Seffsosssir - Tendrills.