உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வாழையடி வாழை

சித்தர் ஒருவர் சேவலின் தாடி, சிங்கத்தின் இதயத்தின் குருதி. பருந்தின் தலை, ஆனேற்றின் ஒருசில பகுதிகள் ஆகியவற்றைக் கொதிக்கவைத்து ஒருவகைச் சாாத்தைத் தயாரித்து அந்த நங்கைக்கு அருந்துமாறு தருகினறார். இங்கிலையில் அந்த அரசிளங்குமரியின கணவன் - அந்த காடடின் மன்னன் - அமைச்சர் முதலியோருடன் அரசவையிலிருந்துகொண்டு விளைவினை ஆவலுடன் எதிர் நோக்கிய வண்ணமிருக்கின்றான். இத்தனை ஏற்பாடுகளும் எதற்காக? அந்த கங்கை கருவுயிர்க்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வாரீசாக வருவதற்கு இளவரசன் ஒரு வன் வேண்டுமல்லவா ?

மேற்காட்டிய கற்பனை ஓவியம் வரலாற்றில் கண்ட நிகழ்ச்சி என்பதற்கு ஐயம் இல்லை. தாயின் ஒரு பக்கத்துச் சூற்பையில் உண்டாகும் முட்டையணுக்கள் ஆண் குழவிகளாகும் என்றும், மறுபக்கத்துச் சூற்பையிலுண்டாகும் முட்டைகள் பெண் குழவி களாகும் என்றும் நம்பினர். இனனும் சிலர் இங்ஙனமே ஆணின் ஒரு பக்கத்து விரையிலுண்டாகும் விந்தணுக்கள் ஆண்மகவுக்குக் காரணமாகும என்றும், மற்றொரு பக்கதது விரையிலுண்டாகும் விந்தணுக்கள் பெண்மகவுக்குக் காரணமாகும் என்றும் கருதினர். தாய் அல்லது தந்தையின் வலிமை, வயது போன்ற கூறுகளே இப் பாலை’ அறுதியிடுவதற்குக் காரணம் என்பது சிலருடைய கோட்பாடாகவும் இருந்தது. கலவியினபொழுது தம்பதிகளின் மனோநிலைகளும், கருத்தரித்தபின் தாயின் ஊட்டம் உடல் நிலைகள் முதலியனவுமே காரணம் என்பது சிலருடைய கொள்கை. இங்ஙனம் பல்வேறு கருத்து வேறுபாடுகளில் யாதோர் உண்மையும் இல்லை என்பது இன்றைய உயிரியல் ஆராய்சசியின் முடிவாகும்.

ஒவ்வோர் உயிரணுவிலும் நிறக்கோல்கள் எனப்படும் பொருள்கள் அடங்கியுள்ளன. மானிட உயிரணுவில் இணை நிறக் கோல்கள் இருக்கின்றன. ஒவ்வோர் இணையிலுமுள்ள ஒன்று தாயின் வழியாகவும் மற்றொன்று தந்தையின் வழியாகவும் வந்தவை. ஆண் பெண் என்ற இருபாலாருடைய உயிரணுக்களிலுள்ள நிறக்

2. LIT6i - Sex.