பக்கம்:விசிறி வாழை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினென்று

ராஜாவின் உறக்கத்தை, முழுமையான மெய்ம்மறந்த உறக்கம் என்று கூறமுடியாது. விழிப்பும் உறக்கமும் கலந்து கிடந்த ஒரு மயக்கம் அவனை அகணத்துப் பிணைத்துக்கொண் டிருந்தது. விடியற்காலேக்குரிய இருளோடு லேசாக ஓர் ஒளி யும் கலந்து கிடக்குமே, அந்த மாதிரி.

அந்த அரை குறையான உறக்கத்தில் ராஜாவின்முன் பாரதி தோன்றுவதும் மறைவதுமாக மாயாஜாலம் புரிந்து கொண்டிருந்தாள். சொப்பன உலகத்தின் விசித்திரங்களெல் லாம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தன.

சினிமாக்களில் வரும் பூர்வ ஜன்மக் காதலியைப்போல் அவள், கல கல வென்று சிரித்த வண்ணம் மெல்லிய துகி லுடன் காற்றிலே மிதந்து வந்தாள். அடுத்த கணம் காற்றி லேயே கரைந்து மறைந்தாள். உறங்கிய நிலையிலேயே, கனவின் மயக்கத்திலேயே ராஜா அந்தச் சொப்பன இன் பத்தை அனுபவித்தவய்ை அவளுடைய அங்க அசைவு ஒவ்வொன்றையும் ரசித்துப் புன்முறுவல் பூத்துக் கொண் டிருந்தான்.

அவள் கல கலவென்று சிரித்தபோது பாரிஜாத மலர் கள் குயிலின் குரல் பெற்று உதிர்வன போன்ற பிரமை உண் டாயிற்று. மறுகணம் அவள் சிவந்த இதழ்கள் முறுவலிக்க, நீண்ட விழிகள் அலேய, கால் சதங்கைகள் கலீர் கலீர் என ஒலிக்க ஒரு நடனப்பெண் வடிவத்தில் தோன்றித் தன் மெல்லிய கரங்களால் ராஜாவைப் பற்றி இழுத்தாள்.

இந்த இன்ப அனுபவம் வெகு நேரம் நீடித்திருக்கவில்லை. இதற்குள் அவன் தூக்கம் கலந்துவிடவே இடையே அறு பட்ட பிலிம் சுருள் மாதிரி, அந்தச் சொப்பனக் காட்சி தடைப்பட்டுப் போயிற்று.

பாரதியின் அழகு வடிவத்தை, ஸ்பரிச இன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாமற்போன ராஜா, கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/109&oldid=686956" இலிருந்து மீள்விக்கப்பட்டது