பக்கம்:விசிறி வாழை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பன்னிரண்டு

பக்கத்து வீட்டுப் பசு மாட்டின் கனிந்த குரல், காலப் பத்திரிகை வந்து விழும் சலசலப்பு, பால் டிப்போ சைக்கிள் மணியோசை இவை யாவும் பார்வதிக்கு விடியற்கால வேளையில் வழக்கமாகக் கேட்டுப் பழக்கமாகிவிட்ட ஒலிகள்.

‘இன்று இன்னும் அந்த ஒலிகளைக் கேட்க முடிய வில்லேயே, ஏன்? என்று யோசித்தவளாய்க்கைக் கடிகாரத் தைப் பார்த்துக் கொண்டாள். அதில் மணி ஐந்தரைதான் ஆகியிருந்தது.

ஒரு வே8ள இந்தக் கடிகாரம் மெதுவாக ஒடுகிறதோ?

என்று எண்ணியவளாய், ராஜா ராஜா’ என்று அழைத் தாள்.

அவன் உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தான். கீழே இறங்கிச் சென்று ஹாலில் மாட்டப்பட்டிருந்த அந்த பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தைப் பார்த்தபோது, அதுவும் ஐந்தரை மணியையே காட்டியது. அந்தக் கடிகாரத்தின்மீது அவளுக்கு அதிக நம்பிக்கை!

“மணி ஐந்தரைதான் ஆகிறதா?...அப்படியானல், நான் இன்று வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமே எழுந்து விட்டிருக்கிறேன்...” என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள். -

உண்மையில், பார்வதி அன்று உறக்கத்தைவிட்டு σταφί5 திருக்கவே இல்லை. இரவெல்லாம் தூங்கியும் தூங்காமலும் படுக்கையில் புரண்டவாறு சேதுபதியைப்ப ற்றி எண்ண மிட்டுக் கொண்டிருந்தவளுக்கு, “எப்போது துரங்கினேம், எப்போது விழித்துக் கொண்டோம்?? என்ற உணர்வே துளியும் இல்லை.

படுக்கையினின்றும் வெகு சீக்கிரமே எழுந்துவிட்டவள், உள்ளத்தில் அமைதியோ உற்சாகமோ இன்றி இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தாள். புத்தகங்கள் எடுத்துப் புரட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/119&oldid=686968" இலிருந்து மீள்விக்கப்பட்டது