பக்கம்:விசிறி வாழை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பன்னிரண்டு 128

‘மணி எட்டு இருக்கும்

‘பாரதி நீ வீட்டுக்குப் போகலாம். எனக்கு உடம்பு சரியில்லை. மற்ற பாடங்களை நாளேக்குப் பார்த்துக் கொள்ள லாம்.ராஜா பாரதியை அவள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா?’ என்றாள் பார்வதி,

அந்த வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜா வுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை, சினிமா டியூன் ஒன்றைச் சீட்டி யடித்துத் தன் உற்சாகத்தை வெளிப்படுத்த எண்ணினன். ஆயினும் உற்சாகத்தை அடக்கிக்கொண்டு, ஒடிப்போய்க் காரின் கதவைத் திறந்து பாரதியை அதில் ஏறிக்கொள்ளச் சொன்னன்.

கார் நகர்ந்து, வாசல் காம்பவுண்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பியது. அந்தப் பக்கம்தான் சேதுபதியின் வீடு இருந்தது. கடற்கரை இருந்த திசையும் அதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/127&oldid=686977" இலிருந்து மீள்விக்கப்பட்டது